தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் தயாராகி வருகின்றன. முன்னதாக அதர்வாவுடன் இணைந்து குருதி ஆட்டம்,  S.J.சூர்யாவுடன் இணைந்து பொம்மை மற்றும் அசோக்செல்வன் உடன் இணைந்து ஹாஸ்டல் என பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் வரிசையாக ரிலீசாக உள்ளன.

மேலும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம், சிலம்பரசனின் பத்து தல, இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை, மற்றும் லாரன்ஸ் உடன் இணைந்து ருத்ரன் ஆகிய திரைப்படங்களில் தற்போது கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் BLOOD MONEY.  எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் மற்றும் நயன்தாராவின் ஐரா படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜூன் KM, BLOOD MONEY படத்தை இயக்கியுள்ளார் . பிரியா பவானி ஷங்கருடன் மெட்ரோ பட நடிகர் சிரிஷ் மற்றும் நடிகர் கிஷோர் இணைந்து நடித்துள்ளனர்.

BLOOD MONEY திரைப்படத்தை எம்பரர் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க, பாலமுருகன் ஒளிப்பதிவில், சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பிரியா பவானி ஷங்கரின் திரைப்படம் நேரடியாக ZEE 5 ORIGINALS OTT தளத்தில் வருகிற டிசம்பர் 24-ம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து BLOOD MONEY படத்தின் டீசர்,ட்ரைலர் மற்றும் இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.