“வங்கி வைப்புத் தொகைகளுக்கான காப்பீடு தொகையை உயர்த்தும் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அது குறித்து விளக்கமும் அளித்தார்.

டெல்லியில் உள்ள விக்யான் பவனில் “வங்கி வைப்புத்தொகை காப்பீடு திட்டம்” என்னும் நிகழ்ச்சியை, பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

நண்பகல் 12 மணிக்கு நடைபெற்ற இந்த விழாவில், ”முதலில் வைப்பாளர்கள் என்று சொல்லப்படும் 5 லட்சம் ரூபாய் வரை உத்தரவாதமான காலக்கெடு வைப்புத் தொகை காப்பீடு பரிவர்த்தனையை மையமாகக் கொண்டு, இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அதாவது, “வைப்புத் தொகை காப்பீடு என்ப, இந்தியாவில் செயல்படும் அனைத்து வணிக வங்கிகளிலும் உள்ள சேமிப்பு, நிலையான மற்றும் நடப்பு, தொடர் வைப்பு போன்ற அனைத்து வைப்பு கணக்குகளையும் உள்ளடக்கியதாக” உள்ளது. 

அத்துடன், “மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் செயல்படும் மத்திய - மாநில மற்றும் முதன்மை கூட்டுறவு வங்கிகளில் உள்ள வைப்புத் தொகைகளும் இதில் அடங்குகின்றன. 

வங்கி சீரமைப்பு நடவடிக்கைகளில் ஒரு சிறந்த மைல்கல்லாகவும், வங்கி வைப்புத் தொகை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படும் தொகையான 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதே” ஆகும்.

குறிப்பாக, “ஒரு வங்கியில் ஒரு வைப்பாளருக்கு 5 லட்சம் என்ற வைப்புத் தொகை காப்பீட்டுத் திட்டத்துடன், கடந்த நிதியாண்டின் இறுதியில் முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை மொத்த கணக்குகளின் எண்ணிக்கையில் 98.1 சதவீதமாக இருந்தது என்றும், இது சர்வதேச அளவுகோலான 80 சதவீதம் என்பதையும் தாண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், “இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளின் கீழுள்ள மொத்தம் 16 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் வைப்புத் தொகையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு, வைப்புத் தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகம் சமீபத்தில் இடைக்கால நிதிக்கான முதல் தவணையை அளித்திருக்கிறது.

“ஒரு லட்சத்துக்கும் அதிகமான வைப்பாளர்களின் மாற்று வங்கிக் கணக்குகளுக்கு அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப 1300 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் செலுத்தப்பட்டு இருக்கிறது” என்றும் கூறப்படுகிறது. 

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “5 லட்சம் ரூபாய் வரை உத்தரவாதமான வங்கி வைப்புத் தொகை காப்பீடு திட்டமானது, நான் முதலமைச்சராக இருந்த போது, வங்கி டெபாசிட் காப்பீட்டுத் தொகையை 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று, மத்திய அரசிடம் நானே பல முறை கோரிக்கை விடுத்தேன். ஆனால், அது பலனில்லாமல் போயிற்று. அதனால், மக்கள் என்னை இங்கு அனுப்பி வைத்தார்கள்” என்றும், சுட்டிக்காட்டிப் பேசினார். 

மிக முக்கியமாக, “சிறிய வங்கிகளின் திறன், வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவே பெரிய வங்கிகளுடன் இணைப்பு குறித்த காலத்தில் தீர்க்கும் போது தான் பிரச்சினையைத் தீவிரம் அடையால் தடுக்க முடியும்” என்றும், பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த இந்நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர், இணை அமைச்சர், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகியோரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.