விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் அபிமானம் பெற்று ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் ஹீரோயின் ரோலில் நடிக்கும் கண்ணம்மாவுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக டார்க் ஸ்கின் ஹீரோயின்களுக்கு நம்மூரில் வேல்யூ இருக்காது. இதனாலேயே மும்பை, கேரளா என மற்ற மாநிலங்களைச் சேர்ந்த ஹீரோயின்களிடம் தான் நமது ஹீரோக்கள் அதிகம் டூயட் பாடி வருவார்கள். 

சினிமாவில் மட்டுமல்ல… சீரியலிலும் கூட பெரும்பாலும் இந்த நிலை தான். ஆனால், அவற்றிற்கெல்லாம் விதிவிலக்காக தமிழ் சீரியல் உலகில் இளைஞர்களின் பல்ஸை அதிர வைத்துக் கொண்டிருப்பவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

ரோஷினி ப்யூர் சென்னை கேர்ள் என்று பெருமை படுகின்றனர் திரை ரசிகர்கள். சென்னையின் செயின்ட் மேரி மெட்ரிகுலேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அர்ச்சனா ஆர்த்தி இயக்கிய ஸ்கார்ஸ் ஆஃப் சொசைட்டி என்ற தமிழ் குறும்படத்தில் ரோஷினி அறிமுகமானார். 

மனம் டெக்ஸ்டைல், மேத்தா ஜூவல்லரி மற்றும் அனந்தம் சில்க்ஸ் போன்ற சில பிரபலமான விளம்பரங்களில் அவர் தோன்றியுள்ளார். இவருக்கு தமிழகம் தாண்டியும் ரசிகர்கள் இருப்பது கூடுதல் ஸ்பெஷல். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியிட்டு அசத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். 

அப்படி தற்போது நீதானே என் பொன்வசந்தம் பாடலுக்கு எக்ஸ்ப்ரெஷன்ஸ் தந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் படத்தின் சாய்ந்து சாய்ந்து பாடலை சேர்த்துள்ளார். 

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் நீங்க ஏன் ஹீரோயினா நடிக்கக்கூடாது என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.