மாமனாரின் பாலியல் வக்கிரங்கள் அதிகமாகி, மருமகளையே பாலியல் பலாத்காரம் செய்து அட்டூழியம் செய்ததால், இளம் பெண் தற்கொலை செய்துகொண்டு உள்ளார். 

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இருக்கும் பெலுர் வட்டத்தைச் சேர்ந்த திருமணமான இளம் பெண் ஒருவர், திடீரென்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

அவர் உயிருக்குப் போராடிய நிலையில், அவரது உறவினர்கள் அந்த பெண்ணை உடனடியாக மீட்டு, அங்குள்ள ஹாசன் மாவட்ட அரசு மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்தது.

இதனால், அந்த இளம் பெண்ணை உடனடியாக மைசூருவில் உள்ள மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காகக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு, அந்த இளம் பெண்ணுக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

அத்துடன், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன என்று விசாரித்து உள்ளனர். அப்போது, “வீட்டில் உள்ள எனது மாமனார், எனக்குத் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை அளித்தார் என்றும், அந்த தொல்லை அதிகரித்து தற்போது அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்றும், இதனால் தான் நான் விஷம் அருந்தினேன்” என்றும், அந்த இளம் பெண் கூறியிருக்கிறார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் உறவினர்கள், மற்றும் பெண்ணின் பெற்றோர் அந்த இளம் பெண்ணின் சாவிற்கு நீதி வேண்டி பெண்ணின் கணவர் வீட்டு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, “உயிரிழந்த பெண்ணின் சாவிற்கு மாமனார் அளித்த பாலியல் பலாத்கார வன்கொடுமையைக் காரணம்” என்று, பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, பெண்ணின் மாமனாரை அதிரடியாகக் கைது செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், “சம்பவத்தன்று, தனது மருமகள் என்றும் பார்க்காமல், அந்த இளம் பெண்ணை அவரது மாமனாரே பாலியல் பலாத்காரம் செய்தது” தெரிய வந்தது. 

மேலும், “இந்த பாலியல் பலாத்காரம் குறித்து வெளியே யாரிடமாவது சொன்னால், உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்றும், அவர் மிரட்டியதும் தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாகவே, பாதிக்கப்பட்ட இளம் பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்பதையும் போலீசார் உறுதி செய்து உள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமனாரைக் கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜபர்படுத்துவது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, மாமனாரின் பாலியல் வக்கிரங்கள் அதிகமாகி, தனது சொந்த மருமகளையே பாலியல் பலாத்காரம் செய்து அட்டூழியம் செய்ததால், பாதிக்கப்பட்ட மருமகள் தற்கொலை செய்துகொண்டு உள்ள சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.