கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தவர் மாரி செல்வராஜ். கதிர் ஹீரோவாக நடித்த பரியேறும் பெருமாள் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தில் கதிருக்கு அப்பாவாக நடித்த நாட்டுப்புற கலைஞரான தங்கராசுவையும் சினிமா ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டனர்.

நாட்டுப்புற கலைஞரான தங்கராசு தற்போது நெல்லையில் வசித்து வருகிறார். அண்மையில் பெய்த கனமழையில் அவரின் வீடு முற்றிலும் சேதமடைந்துவிட்டதாம். அவரின் வீட்டை சீரமைக்க நெல்லை மாவட்ட கலெக்டர் முன்வந்திருக்கிறாராம். ஏழ்மையில் வாடும் தங்கராசுவுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் நிதியுதவி செய்வார்களா என்று சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தங்கராசுவின் நிலையை அறிந்த திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் தங்கராசுவின் வீட்டைச் சரி செய்து தர தாமாகவே முன் வந்துள்ளாராம். தங்கராசு தனக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தவர்கள் ஏதேணும் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறாராம். 

திரைப்பிரபலங்களுக்கு நடிகர் தங்கராசு பற்றி தெரிந்தால் நிச்சயம் எந்த பிரபலமாவது உதவி செய்து அவர் கூழுக்கு பதில் நல்ல சாப்பாடு சாப்பிடவும் உதவி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

பரியேறும் பெருமாள் படத்தை அடுத்து மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கும் கர்ணன் படம் வரும் ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. கர்ணனை அடுத்து விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்குகிறார் மாரி செல்வராஜ்.