15 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்று, திருமணம் ஆன உறவுக்கார இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் சந்திரத்தைச் சேர்ந்த ஷாம் சுந்தர் என்பவர், அதே பகுதியில் கேபிள் பதிக்கும் பணி ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். ஷாம் சுந்தருக்கு, திருமணமாகி மனைவி, மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பெத்த தாசரப்பள்ளி தின்னா கிராமத்தில் இருக்கும் தனது உறவினர்கள் வீட்டுக்கு அவர், அடிக்கடி  வந்து சென்று உள்ளார்.

அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினரின் மகளான 15 வயது சிறுமியுடன் அவர் பழகி வந்து உள்ளார். ஒரு கட்டத்தில், அந்த 15 வயது சிறுமியிடம் பழகி ஆசை வார்த்தைகள் கூறி, “அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வருவோம்” என்று கூறிவிடடு அந்த சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்று உள்ளார்.

ஆனால், அதன் பிறகு அந்த அந்த சிறுமியை வீட்டிற்கு அனுப்பாமல், அந்த சிறுமியை அப்படியே கடத்திச் சென்று உள்ளார். அங்கிருந்து பெங்களூருக்கு அழைத்துச் சென்ற அவர், அங்கு வைத்து அந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து அங்குள்ள ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் சசிகலா, சிறுமியின் உறவினரான ஷாம் சுந்தரை தேடி கண்டுபிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். 

அதனைத்தொடர்ந்து, தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு போலீசார் ஷாம் சுந்தரை அதிரடியாகக் கைது செய்தனர். 

மேலும், சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, ஷாம் சுந்தர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி அவரை சிறையில் அடைத்தனர். 

அதே நேரத்தில், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி மீட்கப்பட்ட சிறுமி, தற்போது அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, 15 வயது பள்ளி மாணவியைத் திருமணம் ஆன உறவுக்கார இளைஞர் ஒருவர், கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.