கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள பூலக்காடு பகுதியை சேர்ந்த சுலைமான் என்பவரின் மனைவி சஹீதா. இவர் பாலக்காடில் உள்ள மதரசாவில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.  கணவர் சுலைமான் கேரளாவில் டிரைவராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். தற்போது சஹீதா நான்கு மாத கர்ப்பமாக இருக்கிறார். இவர்களுக்கு ஆமில் என்ற 6 வயதுடைய மூன்றாவது மகன் இருந்துள்ளார். 


இந்நிலையில் தனது மூன்றாவது மகன் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார் சஹீதா. புகாரை விசாரிக்க சஹீதாவின் வீட்டிற்குச் சென்ற காவல்துறைக்கு காத்திருந்தது அதிர்ச்சி. போலீஸார் சென்று பார்த்தப்போது, 6 வயதான ஆமில் என்ற சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடைந்துள்ளான்.


சிறுவன் ஆமிலின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, தாய் சஹீதாவை கைது செய்து விசாரித்துள்ளனர். விசாரணையில் சஹீதாவுக்கு தோசம் இருந்ததாகவும் அதனால் உடல் மற்றும் மனநிலை சோர்வாக இருந்ததாகவும், அந்த தோஷம் போக தனது மூன்றாவது மகனை நரபலி கொடுத்தால், தோஷம் தீர்ந்துவிடும் என்று கனவு வந்துள்ளது. 


இவ்வாறு செய்தால் தோஷமும் நீங்கிவிடும், மகனும் திரும்ப வந்துவிடுவான் என்று கனவு வந்துள்ளது.


இதனையடுத்து, தூங்கிக்கொண்டு இருந்த மகனை அதிகாலை 4 மணிக்கு எழுப்பி, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார், தாய் சஹீதா. இந்த கொலை சம்பவம் வீட்டில் இருந்த கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தெரியாமல், அவர்கள் மூவரும் உறங்கிக்கொண்டு இருக்கும் போது, குளியலறைக்கு ஆமிலை அழைத்து சென்று, இந்த கொடூரத்தை செய்துள்ளார் சஹீதா.


பல மணி நேரம் கடந்தும் , இறந்த மகன் உயிரோடு வராததால், மகனை கொன்ற உணர்வு ஏற்பட்டு காவல்துறைக்கு தாமே தொடர்புக்கொண்டு வரவைத்து வாக்குமூலம் கொடுத்துள்ளார் சஹீதா.


காவல்துறை வாக்குமூலத்தில் கடவுளின் உத்தரவின் பெயரிலேயே இந்த செயலை தான் செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் சஹீதா. பெற்ற தாயே 6 வயது சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.