விஜய் மக்கள் மன்றத்தில் இருந்த ரவிராஜா மற்றும் ஏ.சி.குமார் ஆகியோர் மன்றத்தில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் நடிகர் விஜய்க்கு சொந்தமான சென்னை சாலிகிராமத்தில் வீடு குடியிருந்தனர். மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டத்தால் அவர்களை வீட்டை விட்டு காலிசெய்யுமாறு விஜய் தரப்பில் இருந்து கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது. ஆனால்  ரவிராஜா மற்றும் ஏ.சி.குமார் இருவரும் வீட்டை  காலிசெய்ய முடியாது என சொல்லிவிட்டனர்.

இதனால் நடிகர் விஜய்  ரவிராஜா மற்றும் ஏ.சி. குமாரை வீட்டை காலி செய்ய வைக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரால் மன்றத்தில் இருந்தவர்களையே இப்படி விஜய் செய்கிறார் என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்து உள்ளது.