சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில், திமுக சிறுபான்மையினர் அணி கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில் பேசிய பேசிய ஸ்டாலின், மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவு கொடுத்து, இரட்டை வேடம் போடுகிறது. உதாரணத்து சிஐஏ போன்ற விவகாரங்கள் அதிமுகவின் நிலைபாடு தமிழ்நாடே அறியும். திமுக ஆட்சி அமைந்ததும் சிறுபான்மைகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுத்த நினைக்கும் அனைத்து செயல்திட்டமும் தமிழகத்தில் ரத்து செய்யப்படும். 

இன்னும் நான்கு மாதத்தில் தமிழகத்தில் நல்ல ஆட்சி மலர்ந்திடும். பல ஆயிரம் கோடியில் நாடாளுமன்றத்தை கட்ட இருக்கும் மத்திய அரசு, அதற்கு பதிலாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்திடுமா? மோடி ஆட்சியில் கடும்குளிரில் லட்சகணக்கான விவசாயிகள் மாத கணக்கில் போராட்டும் நிலை தான் தொடர்கிறது என்று பேசி உள்ளார்.