பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு மிகவும் வித்தியாசமான டாஸ்குகள் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பலூனை தூக்கி நிற்பது, கட்டையை தலையில் வைத்து நிற்பது, பாடல் பாடுவது, அடுத்தவர் மீது குறை சொல்வது போன்ற மிக வித்தியாசமான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு உருண்டு உருண்டு டாஸ்க் செய்யும் வகையில் ஒரு வித்தியாசமான போட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் போட்டியாளர்கள் 2 வளையங்களுக்கு நடுவில் பந்துகளை மாற்றி மாற்றி உருண்டு கொண்டே வைக்க வேண்டும் எனக்கு கண்டிஷன் போடப்பட்டு உள்ளது.

டிக்கெட் டு Finaleவில் இது ஏழாவது டாஸ்க் ஆகும். இதில் போட்டியாளர்கள் தங்களது இடத்திற்காக ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டனர். இப்படி எல்லாம் டாஸ்கை எப்படி யோசிக்கிறீர்கள் என நெட்டிசன்கள் தற்போது பிக் பாஸ் டீமை கிண்டல் செய்து வருகிறார்கள். அது மட்டுமின்றி ஒரு இடத்தில் 3rd அம்பையர் பார்த்துக்கொண்டிருக்கிறார் என பிக் பாஸ் கூறியதையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், ஆரியின் செயல் அனைவரையும் ஈர்த்துள்ளது. பொதுவாகவே பிக்பாஸ் வீட்டில் ஆரி சின்ன விஷயத்திற்கு கூட ரொம்ப நேரம் பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துவந்தது. சுருக்கமாக பேசிய ஆரியை கட்டியனைத்து கொண்டாடினார் ரியோ. 

போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்ட டாஸ்க் என்னவென்றால், வாக்கியதுண்டுகளில் இருக்கும் வாக்கியம் யாருக்கு பொருந்தும் என்பதை போட்டியாளர்கள் வடிவில் உள்ள அட்டையில் பொறுத்த வேண்டும் என்பதே இந்த டாஸ்க். நேரத்தை வீணாக்காமல் ஆரி விளையாடிய விதம் அனைவரையும் ஈர்த்துள்ளது. அருகில் இருந்த ரம்யா, ஆரியின் செயலை கண்டு.. என்ன ஒரு முன்னேற்றம் என்று பாராட்டி வருகிறார்.