ஆண்களின் கவனத்தை  தற்பொழுது ஈர்த்த உடை  அதாவது விஷயத்துக்கு வருவோம். பொதுவாக ஆண்கள் அவர்களின் விருப்பமான ஆடைகளான  நீளக்கைச் சட்டை பேண்ட் என இருந்து வந்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம், ஆந்திரா, கர்நாடக, கேரளம் என அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அவர்கள் விருப்பமான ஆடைகளாக 8 நீளம் கொண்ட வேஷ்டியே இருந்தது. அதனை அவரகள் கலாச்சாரம், பண்பாடு என வகுத்துக்கொண்டு அதனை முன்னிலைப்படுத்தி வந்தனர். காலப்போக்கில் திரைத்துறையினர் மீது ஏற்பட்ட நாட்டம் அவர்களுக்கு ஏற்பட்ட ரசிகர் கூட்டம் அவர்களை போல உடை உடுத்தும் நோக்கில் வேஷ்டியை தவிர்க்க தொடங்கினர். பின்னர் குறிப்பிட்ட காலத்தில் அவர்களின் கலாச்சாரம் என கருதி வந்த வேஷ்டி புறக்கணிக்கப்பட்டது. 

வேஷ்டி அணிபவர்கள் வேறுபடுத்தி காட்டும் பண்பும் இந்த சமூகத்தில் ஏற்பட்டது. வேஷ்டி அணிபவர்கள் கிராமத்தான், பேண்ட் அணிபவர்கள் நகர்புறத்தான் என்ற சிறுமை அவர்களிடத்தில் தோன்ற ஆரம்பித்தது.


இந்த நகர்புற கலாச்சாரம் சமூகத்தில் பரவுவதற்கு கார்ப்ரேட் கம்பெனி பெருதும் வேலை செய்ய தொடங்கினர். திரை துறையினர்களை பயன்படுத்தி அவர்களின் ஆடை விளம்பரங்களை சமூகத்திற்கு எடுத்து சென்றனர். இந்த ஆடைகள் நமக்கு ஏற்றது போல வசதியாக உள்ளது என அவர்களை நம்ப வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு அவர்கள் அதை செய்தும் காட்டினர். இதனால் பருத்தி விவாசாயிகள், நெசவு தொழிலாளர்கள் என பலர்   பாதிப்புக்குள்ளானர். வேஷ்டி ஏழைகளுக்கான உடை எனவும் இந்த சமூகம் பார்க்கவும் தொடங்கினர். இன்னும்  சிலவற்றை ஆராய்ந்து பார்த்தால் அரசியல் வாதிகள் பலர் வேட்டியை கம்பீர உடையாக பார்க்கவும் தொடங்கி கலாச்சாரத்தில் சட்டை மேல் துண்டு போடும் மேலைச்சாதி பழக்கத்தையும் கொண்டு வந்தனர். இந்த பழக்கம் நிலவ ஆரம்பிக்கம் போது கவுரவமாக பார்க்கும் பழக்கமும் ஏற்பட்டது. இதனாலும் வேஷ்டியை இளைஞர்கள் பலர் தவிர்க்க முக்கிய நோக்கமாக இருந்துவந்தது.

மீண்டும் வந்த கலாச்சாரம்:

இந்த வேஷ்டி கலாச்சாரம் மீண்டும் வருவதற்கு முக்கிய காரணமும் திரைத்துறையினர் தான். சமீபத்தில் வந்த திரைப்படங்கள் அனைத்தும் கல்லூரி காதாப்பாத்திரங்கள் வேஷ்டி அணிய வைத்து. அவர்களை ஈர்க்கும் ரசிகர் கூட்டம் வேஷ்டியையும் ஈர்க்க வைத்தது. அதுமட்டுமா திரைத் துறையில் பிரபல நடிகர் என உலாவரும் அவர்கள் வேஷ்டியை பிரத்யேக ஆடையாக பயன்படுத்தியதன் விளைவு இன்று இளைஞர்கள் பலர் வேஷ்டியின் பின் நிற்கின்றனர்.மேலும் உணர்வால் ஒரு சில அரசியல் நோக்கில் பலர் வேஷ்டியை முன்னிறுத்தியதன் நோக்கம் அதும் தொடர்கின்றது. சமீபத்தில் தமிழத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் வேஷ்டி அணிந்தவர்களை பார்வையாளராக அனுமதிக்காத முடிவு தமிழகத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னரே தமிழர் கலாச்சாரம் இதுதான் என இளைஞர்கள் எண்ணத் தொடங்கியவுடன் பலர் இன்று வேஷ்டியை மீண்டும் பயன்படுத்த தொடங்கினர். அதனால தான்  தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டியை அங்கீகரிக்கும் விதமாக, யுனெஸ்கோ நிறுவனம் ஜனவரி 6 ஆம் தேதியை சர்வதேச வேஷ்டி தினமாக அறிவித்தது. இதையொட்டி ஆண்கள் வேட்டியணிந்த தங்களது புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். மேலும், அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கும் ஆண்கள், சிறுவர்கள் வேஷ்டி அணிந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.