காதலர்களிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கரூரில் தான், இப்படி கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கரூர் காமராஜபுரம் சாலையை சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகன் 22 வயதான ஹரிஹரன், அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை கடந்த 23 ஆண்டுகளாகக் காதலித்து வந்து உள்ளார். காதலர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதல் கதை, மிகவும் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் காதலன் ஹரிஹரனின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் காணப்பட்டுள்ளது. காதலனின் நடவடிக்கையில் பல மாற்றங்களைக் கண்டு உணர்ந்து, அவை சரியில்லை என்று உணர்ந்த காதலி, கடந்த 2 மாதங்களாக காதலனிடம் பேசுவதையே நிறுத்திக்கொண்டார். 

ஆனாலும், இதனை ஏற்றுக்கொள்ளாத முடியாத காதலன் ஹரிஹரன், அந்த இளம் பெண்ணிடம் இது குறித்து விளக்கம் கேட்டு தொடர்ந்து பின் தொடர்ந்து சென்றுள்ளார். அத்துடன், இது தொடர்பாக விளக்கம் கேட்கும் போது, அந்த இளம் பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

அதன் படி, காதலன் ஹரிஹரனின் டார்ச்சர் தாங்காமல் அவனை அங்குள்ள காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுப்பதற்காகக் கரூர், ஈஸ்வரன் கோயில் அருகே காதலனை, அப்பெண் வர சொல்லி இருக்கிறார். அதனை நம்பி, தனது காதலியை எப்படியும், இன்று சமாதானம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையுடன், ஹரிஹரனம் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வந்துள்ளார். அங்கு, அந்த பெண் தனது தரப்பு நியாயத்தைப் பேசி அவனுக்கு கடைசியாக ஒரு முறை புரிய வைக்க முயன்றுள்ளார். இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே அப்போது, கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது.

இதனை நேரில் பார்த்த அந்த பெண்ணின் பெரியப்பா உள்ளிட்ட 5 பேர், ஹரிஹரனை அங்கேயே கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில், பலத்த காயமடைந்த ஹரிஹரன், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஹரிஹரனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கரூர் நகர காவல் துறையினர், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆனால், “காதலித்து வந்த இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஹரிஹரன் தற்போது ஆணவக்கொலை செய்யப்பட்டதாக” அவரது உறவினர்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளனர். 

மேலும், “இருவரின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர, கடந்த 6 மாத காலமாக ஹரிஹரனுக்கு அப்பெண் வீட்டாருக்கும் தொடர்ந்து பிரச்சனைகள் 
நடைபெற்று வந்தது” படுகொலை செய்யப்பட்ட ஹரிஹரனின் உறவினர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

இதனிடையே, கரூரில் பிரசித்தி பெற்ற கோயில் வாசல் முன்பாக இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் 
அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.