தஞ்சை பெரிய கோவில் அருகே தொல்லியல் துறை அனுமதியின்றி மாநகராட்சி 30 அடிக்கு மேல் குழி தோண்டி வருதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.


2016ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக  977.50 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டபணிகள் நடைப்பெற்று வருகிறது. அதன்படி தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள திருவள்ளுவர் கலையரங்கத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது என சொல்லப்படுகிறது.


பெரிய கோயிலின் கட்டிடக் கலையை பாதுக்காக்க, யுனெஸ்கோ அமைப்பு, உலக பாரம்பரிய சின்னமாக பெரிய கோவிலை, 1987ம் ஆண்டு அங்கீகாரம் செய்தது. யுனெஸ்கோவின் விதிப்படி தஞ்சை பெரிய கோவிலை சுற்றி 7 கி.மீ தொலைதூரத்துக்கு புதிய கட்டுமானம் எதுவும் எழுப்பகூடாது. அதனால் தற்போது பள்ளம் தோண்டப்பட்டு வருவது சட்டப்படி குற்றம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

இதுக்குறித்து தொல்லியல் துறை, மாநகராட்சிக்கு நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ்க்கு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்படும் என தொல்லியல்துறை தெரிவித்து உள்ளது.