நடிப்புலகின் அசுரனாக திகழ்பவர் நடிகர் தனுஷ். நேற்றய நாளில் அசுரன் தனுஷ் என்னும் டேக் ட்விட்டர் தளத்தை திருவிழாவாக மாற்றியது. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே இந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் தனுஷ். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி அசத்தியது குறிப்பிடத்தக்கது. 

தனுஷ் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துவருகிறார். D43 என அறிவிக்கப்பட்ட இந்த படத்தில் டைட்டில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பை துவங்கியது படக்குழு. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. 

க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கவுள்ளார் என பேசப்படுகிறது. படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். படத்தின் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்துக்காக 3 பாடல்களின் பணிகளை லாக்டவுன் சமயத்திலேயே ஜி.வி.பிரகாஷ் முடித்துக் கொடுத்துவிட்டார். 

தனுஷ் பாடிய பாடலுடன் படப்பிடிப்பை துவங்கினர் படக்குழுவினர்.  கடந்த வாரம் இந்த படத்தின் முதல் பாடலை படமாக்கி முடித்துவிட்டனர். இந்த சுவையூட்டும் செய்தியை டான்ஸ் மாஸ்டர் ஜானி தெரிவித்திருந்தார். கடைசியாக சூரரைப் போற்று படத்தில் நடித்த கிருஷ்ணகுமார் D43 படத்தில் இணைந்தார். 

இந்நிலையில் Youtube பிரபலம் பிரசாந்த் படத்தில் நடிக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷுடன் நடித்த காட்சிகள் பற்றியும், D43 திரை அனுபவம் பற்றியும் பதிவு செய்துள்ளார். வெள்ளித்திரையில் சில படங்களில் கேமியோ அல்லது சிறிய ரோலில் பிரசாந்த் நடித்திருந்தாலும், தனுஷுடன் நடிப்பது இதுவே முதல் முறை. அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.