தமிழ் சினிமா பல்வேறு கலை திறமைகளை கண்டெடுத்த காவிய தாய். கனவுகளை துரத்தும் சராசரி மனிதனாய் நுழைந்து இன்று டாக் ஆஃப் தி டவுனில் இருக்கும் ஃபிலிம் பெர்ஸ்னாலிட்டி தான் K.சதீஷ் (சினிமாவாலா). அவரது திரை பயணம் பற்றிய பதிவு தான் இது. 

சதீஷ்.. எந்த சதீஷ் ? அப்படி என்ன பண்ணிட்டாரு ? உலகமே கொண்டாடுற ஒரு படத்தோட பிள்ளையார் சுழியே இந்த K.சதீஷ் (சினிமாவாலா) என்று சொன்னால் நம்புவீர்களா ? சரியா சொல்லணும்னா ஒரு பத்து வருஷ ஃபிளாஷ்பேக். 2011-ம் ஆண்டு கோகுல் இயக்கத்தில் ஜீவா, ஸ்ரேயா ஆகியோர் நடித்து வெளியான படம் ரௌத்திரம். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சத்யனுடன் காஃபி ஷாப்பில் தகராறு பண்ணுற ஒரு கேரக்டரில் நடித்திருப்பார் K.சதீஷ் (சினிமாவாலா).

galatta rowthiram to master actor producer ksathish

சினிமா காதலன் ஆனது எப்போது ? திரை பயணம் பற்றி பிளாஷ்பாக் போயிட்டு வரலாமா ? 

சென்னை லயோலா கல்லூரியில் படித்தேன். எல்லாரும் சொல்றா மாதிரி தான் "காலேஜ் லைஃப் தனி உலகம்".  நண்பர்களோட வாழ்க்கைய என்ஜாய் பண்ணிட்டு, படிக்க வேண்டிய நேரத்தில படிச்சிட்டேன். அப்படியே லண்டனில் MBA பண்ணேன். ஃபாரின் ரிட்டர்ன்-னா ஸ்டைலா ஊருக்கு வந்த எனக்கு லைஃப் நிறையை கத்து தந்துச்சு. 

முதற் காதல் பத்தி சொல்றா மாதிரி...முதல் வேலை அணுபவம் பத்தி ?

லியோ விஷன் சவுண்ட் எஃபெக்ட்ஸ் ஸ்டூடியோல வேலைக்கு சேர்ந்தேன். அங்க வர படங்களை பார்த்து என் ஹார்ட்ல "சினிமா" சவுண்ட் சிம்ஃபனி வாசிக்க ஆரம்பிச்சது அங்க தான். தரமான படங்களை ரசிகர்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கணும் என்கிற ஆர்வத்துல நானும் லியோ விஷன் VS ராஜ்குமாரும் சேர்ந்து தயாரிக்கனும்னு முடிவு செஞ்சோம். அப்படி தயாரிச்ச முதல் படம் தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். 

நீங்க நடிச்ச படங்கள் என்னென்ன ? ஸ்பீடா சொல்லுங்க கேப்போம் 

ரௌத்திரம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா, காஷ்மோரா, ஜூங்கா, கொரில்லா, கொலைகாரன், தி சேஸ், இப்போ பொங்கல் ட்ரீட்டா வந்திருக்க மாஸ்டர். 

galatta rowthiram to master actor producer ksathish

உங்கள நடிகர்னு நெனச்சோம்.. தயாரிப்பாளர்னும் சொல்றாங்க ! அத பத்தி சொல்லுங்க...

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை தயாரிச்சேன். அது தான் முதல் படம். ஆடியன்ஸ் என்ஜாய் பண்ணுற மாதிரி நல்ல படத்தை தயாரிச்சாச்சு. அதே ஃப்லோல இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தயாரித்தோம். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் ரிலீஸ் ஆனப்போ பட்டி தொட்டியெங்கும் சுமார் மூஞ்சி குமார் தான் டாக்கே. யங்ஸ்டர்ஸுக்கு பிடிச்சா மாதிரி படம் பண்ண தெம்போட கிட்ஸ் விரும்புறா மாதிரி சங்கு சக்கரம் படம் தயாரித்தோம். அதுக்கு அப்புறமா கொரோனா நாலா உலகமே மாறிடுச்சு, சூழ்நிலைக்கு ஏத்தா மாதிரி ரசிகர்களை என்டர்டெயின் செய்யணும்னு இப்போ கொரோனா குமார் படத்தை தயாரிச்சிட்டு இருக்கோம். சுமார் மூஞ்சி குமார நமக்கு அறிமுகப்படுத்தின கோகுல் தான் இந்த படத்தையும் டைரக்ட் பன்றாரு. 

நடிப்பு, தயாரிப்பு வேற ஏதாச்சு வித்தை ஸ்டாக் வச்சுருக்கீங்களா ? 

ப்ராஜெக்ட் டிசைனரா இருந்திருக்கேன். ஒரு ப்ராஜெக்ட் டிசைனரோட ரோல் என்னனா.. ப்ரீ-ப்ரோடுக்ஷன்னுக்கும் முன்னாடி ஸ்டேஜ். டைரக்டர்ஸ் அவங்க கதைய தயாரிப்பாளர்கள் கிட்ட சொல்லுவாங்க. அப்போ கதைக்கு தேவையான ஹீரோ, ஹீரோயின் மத்த ஆர்ட்டிஸ்ட்னு எல்லாரையும் ஃபார்ம் பண்ற முக்கியமான பொறுப்பு. யாமிருக்க பயமேன், மாயா, தி சேஸ், சூர்ப்பனகை, மாஸ்டரில் ஒரு சிறிய பங்கு வரை நம்ம டிசைன் பண்ணது தான். 

இது தவிர ஸ்டுடியோ க்ரீன் & திருப்பதி பிரதர்ஸ்க்கு மார்க்கெட்டிங் ஹெட்டாவும் இருக்கேன். சிங்கம்-2, பிரியாணி, சூதுகவ்வும், குற்றம் கடிதல், கோலி சோடா, சதுரங்க வேட்டை, மஞ்சப்பை, அஞ்சான், உத்தமவில்லன் படத்தொட ப்ரோமோஷன்ஸ்லாம் பண்ணிருக்கேன். 

galatta rowthiram to master actor producer ksathish

திரை ரசிகர்களுக்கும் புரியுறா மாதிரி, நீங்க பண்ணுற ஒர்க் பத்தி சொல்லுங்க... 

ஆர்ட்டிஸ்ட் மேனேஜ்மென்ட்ற ஒரு கம்பெனிய மும்பை, ஹைதராபாத், சென்னைல நடத்திட்டு இருக்கேன். இதோட அல்டிமேட் கோல் என்னறதும் நான் சொல்லிடறேன். ஒரு புது டைரக்டர் ப்ரொடியூசர் கிட்ட கதை சொல்லணும்னு போறப்போ.. தம்பி முதல்ல ஹீரோ/ ஹீரோயின் டேட் வாங்கிட்டு வாங்கனு சொல்லிடுவாங்க. அதையே ஆர்ட்டிஸ்ட் கிட்ட கதை சொல்லுறப்போ, முதல்ல ப்ரொடியூசர் கிட்ட கதைய சொல்லுங்கனு சொல்வாங்க. அந்த புது டைரக்டருக்கு எந்த ரூட்டும் இருக்காது. அதுக்கு தான் இந்த வழி. என்கிட்ட கதை சொன்ன போதும், எனக்கு தெரிஞ்ச ஆர்ட்டிஸ்ட்ட வச்சு நான் அப்ரோச் பண்ணுவேன்.  

galatta rowthiram to master actor producer ksathish

சினிமா தான் HomeGround-னு இருக்கீங்க... உங்க ஃபேமிலி Background பத்தி சொல்லுங்க.. 

அப்பா P.J.குமார் போஸ்ட் மாஸ்டர் (மயிலாப்பூர் பிராஞ்) , அம்மா K.ரஜினி ஹோம்மேக்கர். நான் எனர்ஜியா ஓடிட்டு இருக்க காரணமே எங்க அம்மா தான். இவங்களுக்கு அப்புறம் என்னோட பிரண்ட்ஸ்  ஒவ்வொரு வாட்டியும் துவண்டு நிக்கும் போது எனர்ஜி குடுத்தது என்னோட நண்பர்கள். ஸ்கூல் மற்றும் திரைத்துறை நண்பர்கள். 

galatta rowthiram to master actor producer ksathish

எந்த ஒரு பின்பலமும் இல்லாம சினிமாவுல ஒருத்தர் வளருரது பெரிய விஷயம்ல.. அதுக்கு பின்னாடி இருக்க கஷ்டங்கள் பத்தி உங்க கருத்து ? உங்க மோட்டிவ் என்னனும் சொல்லுங்க 

பயோபிக் மூவிஸ்ல மட்டும் தான் இந்த மாதிரி விஷயம்லாம் பாத்திருக்கோம். இப்போ சொல்லிக்கலாம் எனக்கு 16 வருஷ எக்ஸ்பீரியன்ஸ்னு. என்னோட பிகினிங் ஸ்டேஜ்ல உதவ யாரும் இல்ல. நானே ஓடி ஓடி தான் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். நான் ஒன்னும் சாதனைலாம் எதுவும் பண்ணல. நாலு பேருக்கு உதவி பண்ணுற நிலைமைல கடவுள் என்ன வச்சிருக்காரு. நான் தான் 16 வருஷம் கஷ்டப்பட்டேன். எனக்கு அப்புறம் வர யங்ஸ்டர்ஸாச்சு சரியான பாதைல ட்ராவல் பண்ணனும். அதுக்கான ஃபார்முலாவ நான் நிச்சயம் சொல்லி தருவேன். என்னோட மோட்டிவ்வும் இதுதான். எல்லாமே இங்க Hardwork & Smartwork தான். ஒரு கைடன்ஸா இருக்கனும், ஒரு லிஃப்ட்டா இருக்கனும் அவ்வளவுதான்.


"நேசித்து செய்யும் ஒவ்வொரு காரியமும் ஜிங்கலாலா...அதற்கு ஆகச்சிறந்த உதாரணம் இந்த சினிமாவாலா" வாழ்த்துக்கள் K. சதீஷ் (சினிமாவாலா). இவர் தயாரிப்பில் கொரோனா குமார் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படமும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் என்று கூறினால் அது மிகையாகாது. நம்மில் பலருக்கும் சினிமாத் துறை என்பது கனவு தொழிற்சாலையாகவே இருந்து வருகிறது. பலரது கனவை நனவாக்கிட இந்த எழுத்து வடிவ நேர்காணல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த சாதனை நாயகனின் பணியை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா