தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அம்ரிதா ஐயர்.தெறி,தெனாலி ராமன் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் துணை நடிகையாக நடித்து பின்னர் படைவீரன்,காளி படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஹீரோயினாக அறிமுகமானார் அம்ரிதா ஐயர்.

2019-ல் தீபாவளிக்கு வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் பிகில்.தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியது.பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அம்ரிதா ஐயர் நடித்து அசத்தியிருந்தார்.இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார் அம்ரிதா ஐயர்.

இந்த படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர் கோலிவுட்டின் கனவுக்கன்னியாக அவதரித்தார்.இந்த படத்தை தொடர்ந்து கவின் ஹீரோவாக நடிக்கும் லிப்ட் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் அம்ரிதா ஐயர்.இவற்றை தவிர Red,30 Rojullo Preminchadam Ela உள்ளிட்ட சில தெலுங்கு படங்களில் நடித்து அசத்தியுள்ளார் அம்ரிதா.

இவர் நடித்துள்ள ரெட் தெலுங்கு படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.30 Rojullo Preminchadam Ela படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.இந்த படம் ஜனவரி 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தின் ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்