57-வது நாளாக புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். விவசாயிகளுடன் மத்திய அரசு 10ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது, 18 மாதங்கள் வரை புதிய வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது. விவசாயிகள் வேண்டுமானால் உச்சநீதிமன்றத்தில் முறையிடுமாறு சொல்லப்பட்டது.


புதிய வேளாண் சட்டங்கள் பிரிவு வாரியாக விவாதிக்க அரசு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளை உள்ளடக்கிய குழுவை அமைக்கலாம் என்று சொல்லப்பட்டு இருந்தது.

மேலும் புதிய சட்டத்தை உச்சநீதிமன்றம் 2 மாத காலத்துக்கு நிறுத்திவைத்துள்ளது. வழக்கு குறித்து விசாரணை முடிந்து, விவசாயிகளின் சந்தேகங்கள் களையும் வரை 2 ஆண்டுகள் கூட நிறுத்திவைக்க அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது. தேவைப்பட்டால் வேளாண் சட்டத்தை 2 ஆண்டுகள் கூட நிறுத்திவைக்க அரசு தயாராக உள்ளதாக பியூஷ் கோயல் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.