பல கோடி ரசிகர்களின் இதயத்துடிப்பாய் இருந்து வருபவர் நடிகர் சிலம்பரசன். சினிமா ட்ரெண்ட்டுக்கு ஏற்ப தன்னை அப்டேட்டாக வைத்து கொள்வதில் சிம்புவுக்கு நிகர் சிம்பு தான். சமீபத்தில் சிலம்பரசன் உடல் எடையை குறைத்து கம்-பேக் தந்தது அவரது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சிம்பு அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார். இந்நிலையில் சிம்பு தன் தாயார் உஷா ராஜேந்தருடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவரது தங்கை மகன் ஜேசன் அபியும் அருகில் உள்ளார். சிம்புவுக்கு அவரது தாயார் உணவூட்டும் இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் நாளில் சிலம்பரசன் நடித்து திரைக்கு வந்த படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கியிருந்த இந்த படத்தில் நிதி அகர்வால், பால சரவணன், பாரதிராஜா ஆகியோர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்தார். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இந்த படம் அமைந்தது. 

சமீபத்தில் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அரசியல் மாநாடு நடைபெறும் கூட்டத்தில் கையில் துப்பாக்கியோடு செல்கிறார் சிலம்பரசன். அதன் பின் கட்சி கூட்டத்தில் குண்டு வெடிப்பது போன்ற காட்சி மோஷன் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ரசிகர்களின் இதயத்தை அதிர வைக்கிறது. 

மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு குறித்து பதிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில் சிம்பு நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். புயல், மழை பாராமல் ஷூட்டிங் பணிகளில் சிலம்பரசன் ஆர்வம் காட்டியது ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. 

கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

மாநாடு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு பத்து தல படப்பிடிப்பில் சிம்பு இணைவார் என்று கூறப்படுகிறது. ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, டீஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நாற்காலியில் சிலம்பரசன் அமர்ந்திருப்பது போன்று உள்ளது இந்த போஸ்டர். இந்த படத்திற்கு இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைக்கிறார்.