பெண் ஊழியருடன் கள்ளக் காதல் தொடர்பு காரணமாகப் பிரபல தனியார் நிறுவனத்தில் சி.இ.ஓ. பதவியை அந்நிறுவன அதிகாரி  இழந்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்ட், உலகின் பல்வேறு நாடுகளில் தங்களது கிளைகளைப் பரப்பி உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் மெக்டொனால்ட் பிரபல உணவு நிறுவனமாகப் புகழ் பெற்றுத் திகழ்கிறது. 

McDonaldsCEO

மெக்டொனால்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. அதிகாரியாக ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக் என்பவர் செயல்பட்டு வந்தார்.

இதனிடையே, மெக்டொனால்ட் நிறுவனத்தின் விதிப்படி, சி.இ.ஓ. பதவியில் இருப்பவர்கள் நிறுவனத்தின் பெண் ஊழியரைத் திருமணம் செய்யக்கூடாது, அவர்களிடம் காதல் வலையில் விழக்கூடாது, அவர்களுடன் சேர்ந்து தனியாக வசிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், மெக்டொனால்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக், அந்நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்ததாகவும், அதுவே அவர்களுக்குள் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகவும் கூறப்படுகிறது. 

இந்த தகவல் வெளியே கசிந்த நிலையில், மெக்டொனால்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. பதவியிலிருந்து ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக், பதவி விலகி உள்ளதாக, அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் முறைப்படி அறிவித்துள்ளார். 

McDonaldsCEO

கள்ளக் காதலால் சி.இ.ஓ. பதவி ஒருவருக்கு பிறபேனது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.