தமிழ் சினிமாவின் பிரபல இளம் நடிகரான அதர்வா முரளி நடிப்பில்  அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா மற்றும் ப்ரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த குருதி ஆட்டம் திரைப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

இதனையடுத்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள தள்ளிப்போகாதே திரைப்படமும் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.தெலுங்கில் சூப்பர் ஹிட்டான நின்னுக்கோரி படத்தின் ரீமேக்கான தள்ளிப்போகாதே படத்தை மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

தள்ளிப்போகாதே திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஆடுகளம் நரேன், காளி வெங்கட், ஜெகன், அமிதாஷ் பிரதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.N.சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் தள்ளிப்போகாதே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள என்ன தவம் செய்தேன் பாடலின் ரொமான்டிக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்துள்ள ரொமான்டிக்கான அந்த ப்ரோமோ  வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.