கடாரம் கொண்டான்  படத்தின் ரிலீஸை அடுத்து சீயான் விக்ரம் மகான்,பொன்னியின் செல்வன்,கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இந்த மூன்று படங்களின் ஷூட்டிங்கையுமே சமீபத்தில் நிறைவு செய்தார் சீயான் விக்ரம்.

மகான் படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.இந்த படத்தில் இவருடன் இணைந்து இவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார்.இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் அறிவிப்பின் முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில் சிம்ரன்,பாபி சிம்ஹா,வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடித்துள்ளனர்.இந்த படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் பர்ஸ்ட்லுக்,மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகளை சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் முடித்துள்ளனர் என்ற தகவலை படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.