தன் மகள் ஆராத்யாவை கேலி செய்வதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

aishwarya rai

பாலிவுட் பிரபலம்  அபிஷேக் பச்சன் - ஐஷ்வர்யா ராய் பச்சன் தம்பதியின் மகள் ஆரத்யா பச்சன் தொடர்ந்து பலரால் கிண்டல் செய்யப்பட்டும், சீண்டப்பட்டும் வருகிறார். இதனை அபிஷேக் பச்சன் கண்டித்துள்ளார்.
பாலிவுட் பிரபலங்கள் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் தம்பதியின் மகள் ஆராத்யா பச்சன். கடந்த மாதம்
மாலத் தீவுகளில் குடும்பத்தோடு விடுமுறையைக் கழிக்கச் சென்ற போது ஆராத்யாவின் 10-வது பிறந்த நாளை முன்னிட்டு மாலத்தீவுக்குக் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அபிஷேக் பச்சன், அங்கு தனது மகளின் பிறந்த நாளை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ரசிகர்கள் பலரும் ஆராத்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். எனினும் நெட்டிசன்களில் சிலர் ஆராத்யாவைப் பற்றியும், அபிஷேக் பச்சன் குடும்பத்தைப் பற்றியும் கேலி செய்திருந்தனர். தன் புதிய திரைப்படமான `பாப் பிஸ்வாஸ்’ ப்ரொமோஷன்களின் போது, தன்னையும், தன் 10 வயது மகளையும் இணையத்தில் கடுமையாகக் கேலி செய்வது குறித்து கேட்கப்பட்டது.இதனிடையே சமீபத்தில் ஒரு தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்த அபிஷேக் பச்சன் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு காட்டமாக பதிலளித்துள்ளார்.

அபிஷேக் பச்சன் கூறியதாவது: ஆராத்யாவை கேலி செய்வதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். ஒரு பிரபலமாக நான் விமர்சனங்களை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். மேலும் தன்னுடைய நடிப்பில் பார்வையாளர்கள் குறை கண்டுபிடிப்பது தவறில்லை எனவும், அதனை சரிசெய்து கொள்வது தன்னுடைய பணி என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், என் மகளை கேலி செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆராத்யாவை கேலி செய்பவர்கள் தைரியம் இருந்தால் என் முகத்துக்கு நேராக  அதைச் செய்து பார்க்கட்டும் என்று அபிஷேக் பச்சன் காட்டமாக தெரிவித்தார்.