மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்த நடிகர் துல்கர் சல்மான், தென்னிந்திய  திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அடுத்தடுத்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் சல்யூட், ஹிந்தியில் இயக்குனர் பால்கி இயக்கத்தில் சுப்-ரிவஞ் ஆஃப் தி ஆர்டிஸ்ட் , தமிழில் முன்னணி நடன இயக்குனரான பிருந்தா இயக்கும் முதல் திரைப்படமாக ஹே சினாமிகா , மற்றும் தெலுங்கில் ராணுவ வீரராக யுத்தம் தோ ராசினா பிரேம கதா படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான குருப் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் குருப் படத்தில் துல்கருடன் இணைந்து டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், சன்னி வெய்ன், ஷைன் டாம் சாக்கோ, ஷபீடா துள்ளிபலா, சுரபி லக்ஷ்மி மற்றும் பரத் சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர். 

இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கிரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் குருப் திரைப்படத்தை நிமிஷ் ரவி ஒளிப்பதிவில் சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ள குருப் வேஃபெரர் பிலிம்ஸ் சார்பில் நடிகர் துல்கர் சல்மான் தயாரித்துள்ளார். இந்நிலையில் தற்போது குருப் படத்தின் பாத்திரா காலம் பாடல் வீடியோ வெளியானது.அந்த பாடல் வீடியோ இதோ ...