தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் தனது 37ஆவது படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.Sarkaru Vaari Paata என்று இந்த படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் ஏப்ரல் 1 2022-ல் வெளியாகும் என்று அறிவிக்கபட்டுள்ளது.இதனை தொடர்ந்து த்ரிவிக்ரம் இயக்கத்தில் தயாராகும் படத்தில் நடிக்கவுள்ளார்.

ட்விட்டரில் பல சாதனைகளை நிகழ்த்தியவராக மகேஷ் பாபு உள்ளார்.படங்களை தாண்டி பல சமூகஅக்கரை கொண்ட செயல்களை செய்வதும் அதுகுறித்து பகிர்ந்தும் வருவார்.தற்போது ட்விட்டரில் 12 மில்லியன் ரசிகர்களை பெற்று அதிகம் பின்தொடரப்பட்ட தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்