9 ஆம் வகுப்பு மாணவி உடன் நட்பாகப் பழகி வந்த மளிகைக் கடை உரிமையாளர், அந்த சிறுமியைத் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த நிலையில், அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த 40 வயதான சிவ குமரேசன், தனது வீடு இருக்கும் அதே பகுதியில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்குத் திருமணம் ஆன நிலையில், குழந்தைகள் இன்னும் பிறக்கவில்லை. 

இப்படியான சூழ்நிலையில், சிவ குமரேசன் அதிக நேரம் தனது கடையிலேயே இருந்து வந்திருக்கிறார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி, அடிக்கடி சிவ குமரேசனின் மளிகைக் கடைக்கு வந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்து உள்ளார். இதனால், அந்த 9 ஆம் வகுப்பு மாணவி உடன், 40 வயதான சிவ குமரேன் நட்பாகப் பழகி வந்திருக்கிறார். இப்படியாக, 16 வயது சிறுமியும், 40 வயதான நபருக்கும் இடையே, சில காலம் நட்பு என்ற பெயரில் பழகி வந்திருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில், அந்த 16 வயது சிறுமியான அந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மீது, அந்த 40 வயதான சிவ குமரேசன் சபலப்பட்டு உள்ளார். 

இதனையடுத்து, அந்த மாணவியை முதலில் அவர் பாலியல் ரீதியாக சில சில்மிஷங்களைச் செய்ததாகத் தெரிகிறது. இதனை அந்த சிறுமி விளையாட்டாக எடுத்துக்கொண்டதாகவும் தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக, அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவ்வப்போது அந்த மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியாக, அந்த மாணவியை ஏமாற்றி அந்த நபர் தொடர்ச்சியாக பாலியல் இச்சையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இதன் காரணமாக, மாணவியின் உடல் நிலையில் திடீரென்று மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அத்துடன், அவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டு உள்ளது. 

இதனால், பயந்து போன அந்த சிறுமியின் பெற்றோர், தங்களது மகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.

அந்த மருத்துவமனையில் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், “சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பதாக” தெரிவித்து உள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், அங்கேயே அழுது புரண்டு, சிறுமியிடம் விசாரித்துப் பார்த்து உள்ளனர். அப்போது, அந்த சிறுமியும், மளிகைக் கடை உரிமையாளர் சிவ குமரேசனின் பாலியல் அத்து மீறல்கள் குறித்து அழுதுகொண்டே தெரிவித்து உள்ளார்.

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மளிகைக் கடை உரிமையாளர் சிவ குமரேசன் மீது பாலியல் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிவ குமரேசனை அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணிகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.