தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி ஷோவுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த அளவுக்கு இந்த ஷோவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதில் பங்கேற்கும் நடிகர்களும் அதிகம் பாப்புலர் ஆகின்றனர். சமையல் நிகழ்ச்சியை மிகவும் காமெடியாக எடுத்து செல்வதால் ரசிகர்கள் நிச்சயம் இந்த ஷோவை பார்க்கும் போது விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

தற்போது இரண்டாவது சீசன் குக் வித் கோமாளி ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் போட்டியாளராக நடிகை பவித்ரா லட்சுமி உள்ளார். அவருக்கும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் அவரை எக்கச்சக்க ரசிகர்கள் பின்பற்றி வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஆறு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். 

உங்களில் யார் பிரபுதேவா, மானாட மயிலாட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான இவர் மாடலிங் மற்றும் தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் புடவையை வெட்டிவிட்டு போஸ் கொடுக்கும் பவித்ரா லக்ஷ்மியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த போட்டோஷூட் பவித்ரா கடந்த வருடம் செய்தது என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

சமீபத்தில் சமூக ஊடங்கங்களில் பவித்ராவின் பெயரில் போலியான கணக்குகள் இருப்பது தெரியவந்தது. இது பற்றி பவித்ரா ஒரு வீடியோ வெளியிட்டு புகார் கூறியிருந்தார்.

அவர் பேசுகையில், சில பக்கங்கள் என்னை போலவே செயல்படுகிறார்கள். அது எந்த அளவுக்கு சரி என தெரியவில்லை. நான் ட்விட்டரில் அவ்ளோ ஆக்டிவ் கிடையாது. இன்ஸ்டாகிராமில் இருந்து பழகிவிட்டேன். அதை advantage ஆக எடுத்துக்கொண்டு என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள். அதற்கு நான் 200 சதவீதம் பொறுப்பு அல்ல. ட்விட்டர் ஐடி. நீங்கள் எனக்கு கொடுக்கும் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. எனக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை. ரொம்ப ரொம்ப நன்றி என்று விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.