2002-ம் ரோஜா கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். அதையடுத்து பல வெற்றி படங்களில் நடித்தார். ஏப்ரல் மாதம், பம்பரக்கண்ணாலே, பார்த்திபன் கனவு போன்ற படங்கள் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. தளபதி விஜய் நடித்த நண்பன் திரைப்படம் இவருக்கு கம்பேக் என்றே கூறலாம். தற்போது இவர் நடித்துள்ள படம் மிருகா. 

ஜாகுவார் ஸ்டுடியோஸ் சார்பில் பி.வினோத் ஜெயின் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் பார்த்திபன் இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த்துடன் ராய்லட்சுமி மற்றும் தேவ் கில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனத்தை இயக்குனர் பன்னீர்செல்வம் எழுதியுள்ளார். மலைப்பகுதிக்குள் இருந்து அட்டகாசம் செய்கிறது ஒரு காட்டுப் புலி. அதனால் ஏற்படும் விளைவுகளும், சில மர்மச் சம்பவங்களும்தான் படத்தின் கதையாம்.

இந்த படத்தின் மோஷன் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அருள்தேவ் படத்திற்கு இசையமைக்கிறார். சுதர்ஷன் படத்தொகுப்பு பணிகளை பார்த்து கொள்கிறார். திரைப்படத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் ஒரு சுவாரஸ்யமான ஒப்பீட்டை இயக்குனர் சொல்வதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குனர் பார்த்திபன் இதுவரை விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார்., மேலும் நான் கடவுள் படத்தில் இயக்குனர் பாலாவுடன் பணிபுரிந்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

படத்திலிருந்து கடைசியாக ஐ யம் பேட் பாய் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. ரஞ்சித் மற்றும் ஸ்வேதா மோகன் பாடிய இந்த பாடல் வரிகளை ARP ஜெயராம் எழுதியுள்ளார். திங்க் பியூட்ச்சர் ஸ்டுடியோஸ் இந்த பாடலின் VFX பணிகளை மேற்கொண்டனர். 

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. நடிகர் தனுஷ் இந்த ட்ரைலரை வெளியிட்டுள்ளார். 

இதைத்தொடர்ந்து மஹா திரைப்படத்தில் நடித்துள்ளார் ஸ்ரீகாந்த். எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா. இந்த படத்தில் நடிகர் STR கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அதன் பிறகு, செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சத்யராஜ் நடிக்கும் காக்கி படத்தில் நடிக்கவிருக்கிறார் ஸ்ரீகாந்த்.