பாலிவுட் சூப்பர்ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சன் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் தவிர்த்து தனக்கென்று ஒரு வலைப் பக்கத்தையும் வைத்து அதில் தனது அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அமிதாப், தனக்கு சில உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதால் விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் அவர் தனது பிளாக்கில் குறிப்பிட்டுள்ளார். இதனால் தொடர்ந்து பிளாக்கில் தன்னால் எழுத முடியாது எனவும் அமிதாப் விளக்கி உள்ளார். 

மருத்துவ காரணங்களால் அறுவை சிகிச்சை, அதனால் எழுத முடியாது என்று மட்டும் அமிதாப் குறிப்பிட்டுள்ளார். தனக்கு எனக்கு பிரச்சனை, எதற்காக அறுவை சிகிச்சை என்பது பற்றி அவர் எந்த விபரத்தையும் பகிரவில்லை. 

இதற்கு முன் அமிதாப் பச்சன் பகிர்ந்த பிளாக் பதிவில், விகாஸ் பஹின் அடுத்த படத்தில் நடிக்க போவதாக குறிப்பிட்டிருந்தார். தற்போது, ஷெகர் மற்றும் ஜூகுந்த் படங்களின் ரிலீசுக்காக காத்திருப்பதாகவும் அமிதாப் தெரிவித்துள்ளார். அஜய் தேவ்கனின் மே டே, ரன்பீர் கபூர் நடிக்கும் பிரம்மாஸ்த்ரா, பிரபாஸ் 21 ஆகிய படங்களில் அமிதாப் நடித்து வருகிறார்.

கடந்த வருடம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதியான செய்தியை அறிந்த ரசிகர்கள் பதறினர். அவருக்காக பல புனித ஸ்தலங்களில் பிரார்த்தனை செய்தனர். தற்போது மீண்டும் மருத்துவமனையா ? என்று பதறி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.