இந்தியா முழுவதும் , நாளை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறையின்  சுற்றறிக்கையில், தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசிக்காக 250 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கலாம். இந்த கட்டணத்தில் 150 ரூபாய் தடுப்பு மருந்தின் விலையாகவும், சேவை கட்டணமாக 100 ரூபாய் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புபவர்கள் கோவின் 2.0 செயலி மூலமோ அல்லது ஆரோக்ய சேது போன்ற செயலிகள் மூலமோ அரசு அல்லது தனியார் மருத்துவமனை பெயர்களை விருப்பம் போல் தேர்வு செய்துக் கொள்ளலாம். தடுப்பூசி போட பதிவு செய்பவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை தர வேண்டும்.

ஆனால் 45 வயதுக்கு முதல் 59 வயதுக்குள் இருப்பவர்கள் தங்களுக்கு இருக்கும் இணை நோய் குறித்து மருத்துவர் சான்றிதழை பெற்றுத் தர வேண்டியது கட்டாயம் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.