சேவல் ஒன்று, இளைஞரின் ஆணுறுப்பை நறுக்கிய நிலையில். கொலை வழக்கில் சேவல் ஒன்று குற்றவாளியாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஜக்தியல் மாவட்டத்தில் உள்ள லோத்துனூர் கிராமத்தில் சேவல் பந்தயம் நடத்த அந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் சிலர் ஏற்பாடுகள் செய்து வந்தனர். தமிழகத்தில் மதுரையைப் போலவே, தெலங்கானாவில் குறிப்பிட்ட இந்த பகுதியிலும் சேவல் பந்தயம் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

இப்படி, சேவல் பந்தயம் நடத்த பல்வேறு முன்னேற்பாடுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த சேவல் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக, பல்வேறு அங்குள்ள கொண்டப்பூர் பகுதியைச் சேர்ந்த தனுகுலா சதீஷ் என்பவர், தன்னுடைய சேவலுடன் பந்தயம் நடைபெறும் இடத்திற்கு வந்து உள்ளார்.

அப்போது, சேவல் பந்தயம் பார்க்க மக்கள் அங்கு திரண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக, அந்த பகுதி முழுவதும் அப்படியே விழாக்கோலம் போல் காட்சி அளித்து உள்ளன. 

மேலும், சேவல் கொண்டு வந்த சதீஷ், தன்னுடைய சேவலை பந்தயத்தில் இறக்குவதற்காக அந்த சேவலின் காலில் ஒரு கத்தியை கட்டி உள்ளார்.

அப்போது, அந்த பந்தயத்தைப் பார்க்க வழக்கத்தை விட மிக அதிகமான மக்கள் குவிந்ததால், போட்டியில் கலந்துகொண்ட சேவலானது, அப்படியே பயந்து போய் அங்கிருந்து ஓட முயன்று உள்ளது. 

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஷ், உடனடியாக சேவலை அழுத்திப் பிடிக்க சதீஷ் முயன்று உள்ளார். அந்த தருணத்தில், சேவலின் காலில் இருந்த கத்தியானது, சதீஷின் ஆணுறுப்பை எதிர்பாராத விதமாக வெட்டி உள்ளது. இதில், அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அதிக அளவிலான ரத்தம் வெளியேறி உள்ளது.

இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக அவசர அவசரமாக அவரை அழைத்துச் 
சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து, அங்கு விரைந்து வந்த அப்பகுதியைச் சேர்ந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். 

போலீசார் நடத்திய இந்த விசாரணையில், சதீஷ் உயிரிழப்புக்கு அவர் வளர்த்த சேவல் தான் காரணம் என்பது தெரிய வந்தது. 

இதையடுத்து, சம்மந்தப்பட்ட அந்த சேவலை கைது செய்த போலீசார், அந்த சேவலை காவல் நிலையத்தில் கட்டிப்போட்டு வைத்து உள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்ட சேவலுக்கு தேவையான உணவுகளை, போலீசார் வழங்கி வருகின்றனர். 

இந்திய காவல் துறை வரலாற்றில் கொலை குற்றத்திற்காகச் சேவல் ஒன்று கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பதால், இந்த செய்தியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அத்துடன், சேவல் கைது செய்யப்பட்டது சரியா? தவறா? என்று இணையத்தில் ஒரு பட்டிமன்றமே சென்றுகொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.