தொழிலதிபருடன் உல்லாசமாக இருந்துவிட்டு அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு சம்மந்தப்பட்ட பெண் உட்பட இரு பெண்கள் சேர்ந்து மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில், தமிழகத்தில் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு மிரட்டல் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன், தொழிலதிபராக இருந்து வருகிறார். இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு தனது நிறுவனத்தின் வேலை விசயமாகப் பெங்களூருக்கு சென்று உள்ளார். 

அப்போது, அங்குள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து, சுகன்யா என்ற இளம் பெண்ணுடன் தங்கி உள்ளார். 

அந்த நேரத்தில், சுகன்யா உடன் தொழிலதிபர் வெங்கடேசன், தனிமையில் இருந்ததாக தெரிகிறது. இதனை, தொழிலதிபர் வெங்கடேசனுக்குத் தெரியாமல் அவருடன் உல்லாசமாக இருந்த சுகன்யாவே, தனது செல்போனில் மறைமுகமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது.  

அதன் தொடர்ச்சியாக, சில மாதங்கள் கடந்த நிலையில், அந்த வீடியோவை வெங்கடேசனிடம் காட்டிய உல்லாசம் அனுபவித்த இளம் சுகன்யா, “இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க நீங்கள் 20 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும்” என்று, கேட்டு மிரட்டி உள்ளார்.

இதனால், பயந்துபோன தொழிலதிபர் வெங்கடேசன், அவர் கேட்டபடியே 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, தப்பித்தால் போதும் என்று வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் நந்தினி என்ற மற்றொரு இளம் பெண், தொழிலதிபர் வெங்கடேசனை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். 

அப்போது “உங்களது வாட்ஸ்ஆப்பி எண்ணிற்கு ஒரு வீடியோ அனுப்பி உள்ளேன். அதைப் பாருங்கள், எனக்கு எதாவது கவனியுங்கள்” என்று, சொல்லி இணைப்பைத் துண்டித்து உள்ளார்.

அதன் படி, அவரும் தனது செல்போனை பார்த்துள்ளார். அப்போது, “சுகன்யா உடன் ஹோட்டலில் தனிமையில் இருந்த உல்லாச காட்சிகள்” அதில் இருந்து உள்ளது. இதனைப் பார்த்துப் பயந்துபோன தொழிலதிபர் வெங்கடேசனை, மிரட்டிய இளம் பெண் நந்தினி, “20 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும்” என்று, மிரட்டி இருக்கிறார். 

“அப்படி பணம் தரவில்லை என்றால், இந்த வீடியோவை உங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்” என்று, மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இதன் காரணமாக, இன்னும் பயந்துபோன தொழிலதிபர் வெங்கடேசன் 14 லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்து, “என்னிடம் இப்போது இவ்வளவு தான் இருக்கிறது” என்று கொடுத்திருக்கிறார். 

அதன் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்கள் கழித்து, நிரேஷ் என்பவருடன் சேர்ந்து சுகன்யா, நந்தினி ஆகிய இளம் பெண்கள் மீண்டும் வெங்கடேசனை தொடர்பு கொண்டு 80 லட்சம் ரூபாய் வேண்டும் என்று, மீண்டும் மிரட்டத் தொடங்கியிருக்கிறார்கள். 

இதனால், மிகவும் நொந்துபோன தொழிலதிபர் வெங்கடேசன், சென்னை சைபர் ஃகிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தொழிலதிபர் வெங்கடேசனை மிரட்டிய இளைஞர் நிரேஷ், இளம் பெண்களான சுகன்யா, நந்தினி ஆகிய 3 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்களை ஆண்கள் மிரட்டி வந்த காலம் மாறி, தற்போது பெண்கள்; ஆண்களை மிரட்டும் காலம் வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.