13 வயது சிறுமியிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டு 65 வயது முதியவர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பெரியூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். தற்போது, பள்ளிகளுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ள நிலையில், அந்த சிறுமி தனது வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

அப்போது, சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அந்த 13 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அந்த நேரத்தில், தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பெரியூர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஜெய்கிருஷ்ணன் என்ற முதியவர், பென்னாகரம் அடுத்த காட்டுப்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாடு மேய்த்து உள்ளார். 

அப்போது, அப்பகுதியில் வசித்து வந்த குறிப்பிட்ட அந்த 13 வயது சிறுமியிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டு, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டு உள்ளார்.

இதனால், அந்த சிறுமி கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அலறித்துடித்து உள்ளார். ஆனால், அப்போது அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் உதவிக்கு யாரும் விரவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, சிறுயை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அந்த முதியவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

முதியவரின் இந்த பாலியல் அத்து மீறலால், நேற்றைய தினம் அந்த 13 வயது சிறுமிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

அதற்கு முன்னதாக, அந்த சிறுமிக்கு திடீரென்று ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால், பயந்துபோன சிறுமியின் பெற்றோர், உடனடியாக சிறுமியை அங்குள்ள பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது, மருத்துவர்கள் அந்த சிறுமியிடம் விசாரித்து உள்ளனர். 

அப்போது, சிறுமியும் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையைத் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். 

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இப்படியாக, கடந்த 10 நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு 65 வயது முதியவரான ஜெய்கிருஷ்ணனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரிடம் வாக்கு மூலம் பெற்று, அவரை சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.