பிரபல நடிகையும் கோடீஸ்வரருமான பமீலா ஆண்டர்சன் 5 வது முறையாக தனது மெய்க் காப்பாளரைத் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மெய்க் காப்பாளருக்கு இது 3 வது திருமணமாகும். 

கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகையும், கோடீஸ்வரருமான பமீலா ஆண்டர்சன் தான், தற்போது 5 வது முறையாக தன்னுடைய மெய்க் காப்பாளரையே திருமணம் செய்துகொண்டவர் ஆவர்.

கனடிய - அமெரிக்க நடிகையான பிரபல நடிகையும், கோடீஸ்வரருமான பமீலா ஆண்டர்சனுக்கு தற்போது 52 வயது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. 

நடிகை பமீலா ஆண்டர்சனின் தற்போதைய சொத்து மதிப்பான சுமார் 12 டாலர்ஸ் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

அத்துடன், நடிகை பமீலா ஆண்டர்சனின் இது வரை 4 திருமணங்கள் வரை செய்திருந்தார். அவருக்கு குழந்தைகளும் உண்டு.  நடிகை பமீலா ஆண்டர்சனின் முதல் திருமணமான, பிரபல இசைக்கலைஞர் டாமி லீ என்பவருடன் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு, ப்ராண்டன் மற்றும் டைலன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

அத்துடன், முதல் கணவர் டாமி லீயை சந்தித்த நான்கு நாட்களிலேயே நடிகை பமீலா ஆண்டர்சன் அவரை திருமணம் செய்து கொண்டதால், அந்த நேரத்தில், இந்த விசயம் பெரிய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், 52 வயதான பமீலா ஆண்டர்சன், 5 வது முறையாகத் தனது மெய்க்காப்பாளராக இருந்த டான் ஹேஹர்ஸ்ட்டை திருமணம் செய்துகொண்டு உள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்கள் மட்டும் கலந்துகொண்ட நிலையில், கனடாவின் வான்கூவர் தீவில் இந்த திருமணம் அசத்தலான முறையில் அதுவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது. 

நடிகை பமீலா ஆண்டர்சனின் இந்த 5 வது திருமணத்திற்கு அவரது மகன்கள் இருவரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அத்துடன், அவர்களும், இந்த திருமண விழாவில் கலந்துகொண்டது, தங்களது தாயாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 

இந்த புதுமண தம்பதியினர் தற்போது மிகவும் மகிழ்ச்சியான முறையில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில், தற்போது 5 வது முறையாகத் திருமணம் செய்துகொண்டுள்ள டான் ஹேஹர்ஸ்ட்டைக்கு தற்போது 42 வயது ஆகிறது.

இவரது முன்னாள் காதலியான கேரி, இது பற்றி கூறும்போது, “எங்களுக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ள நிலையில் தங்களின் 5 வருட வாழ்க்கையை முறித்துவிட்டு, தன்னுடைய காதலரை நடிகை பமீலா ஆண்டர்சன் மயக்கி, வளைத்துப் போட்டு விட்டார்” என்று, 5 வது கணவனின் 2 வது மனைவி பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளார். 

“தனது காதல் கணவன் டான் ஹேஹர்ஸ்ட்டின் இந்த திருமணத்தால், எங்களது இரு குடும்பமும் தற்போது சுக்கு நூறாக நொறுங்கிப் போய் உள்ளதாகவும்” பாதிக்கப்பட்டுள்ள 2 வது மனைவி கவலைத் தெரிவித்து உள்ளார்.

அதன் படி, தற்போது நடிகை பமீலா ஆண்டர்சனைத் திருமணம் செய்துள்ள டான் ஹேஹர்ஸ்ட்டைக்கு இது 3 வது திருமணம் ஆகும். இந்த திருமணம் விசயம், இணையத்தில் தற்போது பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.