சமூக வலைத்தளங்களில் நட்பாக பழகி, பள்ளி மாணவிகள் பலரை சீரழித்த கல்லூரி மாணவனை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். 
 
உலகில் தொழிற் நுட்பங்கள் வளர்ந்த பிறகு, அது சார்ந்த குற்றங்களும், தொடர்ந்து அதிகரித்து உள்ளன. இதில், தொழிற் நுட்பங்களைக் குறை சொல்லி பயன் இல்லை. அதைத் தவறாகப் பயன்படுத்தும் மனிதர்களைத் தான் குறை சொல்லி ஆக வேண்டி இருக்கிறது.

அதே நேரத்தில், நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாகத் தொடர்ச்சியாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதற்கு உதாரணமாகத் தான் தினம் தினம் புதிது புதிதாகப் பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றும் பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறி வருகின்றன. அப்படியான, ஒரு சம்பவம் தான், சிதம்பரத்தில் அரங்கேறிய இந்த சம்பவமும்.

விருத்தாசலத்தில் உள்ள பெரிய வடவாரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற மாணவர், இன்ஜினியரிங் படித்து வருகிறார். இந்த கல்லூரி மாணவர், சிதம்பரத்தில் உள்ள பள்ளி மாணவி ஒருவரின் வீட்டிற்குச் சென்று உள்ளார். அந்த வீட்டில், சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில், சிறுமியுடன் அந்த கல்லூரி மாணவன் தனிமையில் உல்லாசம் அனுபவிக்க முயன்று உள்ளான். அப்படி, சிறுமியும் அந்த கல்லூரி மாணவனும் தனிமையில் இருக்கும் சமயத்தில், சிறுமியின் தாய் அங்கு திடீரென்று வீட்டிற்கு வந்து உள்ளார். 

சிறுமியின் தாய் திடீரென்று வந்ததால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த கல்லூரி இளைஞர், அந்த வீட்டில் உள்ள பாத்ரூரில் சென்று ஒளிந்து கொண்டு உள்ளார். அந்த இளைஞர் ஓடி ஒளிந்துகொள்ளும் சத்தம் கேட்டுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்த தன் மகளும் பதறிப் போனதை கவனித்த அந்த தாய், வீட்டிற்கு சம்மந்தமே இல்லாத யாரோ ஒருவன் தன் வீட்டில் இருப்பதை அந்த தாயார் கண்டு பிடித்து உள்ளார். இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு, சிறுமியின் தாய் தகவல் தெரிவித்து உள்ளார். 

இது குறித்து அந்த வீட்டிற்கு போலீசார் விரைந்து வந்துள்ளனர். அப்போது, அந்த வீட்டின் பாத்ரூம் கதவை உடைத்துக்கொண்டு போலீசார் உள்ளே சென்று பார்த்து உள்ளனர். அங்கு, கல்லூரி மாணவன் ஜெயக்குமார் பதுங்கி இருந்து உள்ளார். அந்த இளைஞரை பிடித்த போலீசார், அவனிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. 

மேலும், இளைஞர் ஜெயக்குமாரின் செல்போனை வாங்கி போலீசார் ஆய்வு செய்து உள்ளனர். அதில், “குறிப்பிட்ட இந்த சிறுமி மட்டுமல்லாது, பல பள்ளி மாணவிகளுடன் ஜெயக்குமார் படுக்கையறையில் ஒன்றாக மற்றும் நெருக்கமாக இருப்பதைப் போன்ற பல்வேறு விதமான புகைப்படங்களைப் பார்த்த”  போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக, அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “எந்த பெண்ணிடம் தொடர்பு இருந்தாலும், படுக்கை அறையில் வைத்து அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதை, இந்த இளைஞன் வழக்கமாகவும், வாடிக்கையாகவும் வைத்திருந்தது” தெரிய வந்தது. 

அத்துடன், “பல பள்ளி மாணவிகளின் வாழ்க்கையைச் சீரழித்த இந்த கல்லூரி மாணவன், அந்த சிறுமிகளிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாரா?” என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.