ஆக்ஷன் படத்தின் ரிலீஸை தொடர்ந்து விஷால் துப்பறிவாளன் 2,சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.சக்ரா படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படம் OTT-யில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து தனது நெருங்கிய நண்பர் ஆர்யாவுடன் இணைந்து இருமுகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.2017-ல் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படமான துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகமும் விறுவிறுப்பாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வந்தது.

இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளனர்.இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நிறைவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.முதலில் இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தை இயக்கி வந்தார்,சில காரணங்களால் மிஷ்கின் இந்த படத்திலிருந்து விலகியுள்ளார்.

இதனையடுத்து விஷால் இந்த படத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.