தளபதி விஜயின் தரமான சாதனை ! விவரம் இதோ
By Aravind Selvam | Galatta | October 27, 2020 18:06 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து அந்த ஆண்டின் பெரிய லாபம் ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றது.இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்து திரையரங்குகள் சகஜ நிலைக்கு திருப்பியதும் மாஸ்டர் படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.கொரோனா தடுப்பு பணிகளில் விஜய் ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்து தங்கள் பங்கை சிறப்பாக செய்து வருகின்றனர்.இவரது பிறந்தநாளுக்கும் விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து நண்பர்களுடன் வீடியோகால்,மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றது என்று ஒரு சில முறை தளபதியின் புகைப்படங்கள் வெளியாகி தாறுமாறாக ட்ரெண்ட் அடித்தன.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள இவரை பற்றி என்ன தகவல் வந்தாலும் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி விடும்.சமீபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் விஜய் இந்த புகைப்படங்களும் செம வைரலாகி வந்தன.
தற்போது இன்ஸ்டாகிராமில் அதிகம் மென்ஷன் செய்யப்பட்ட ஹாஸ்டேக் என்று தளபதி என்ற ஹாஸ்டேக் 4 மில்லியன் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையையும் தளபதி விஜய் பெற்றுள்ளார்.
Chiyaan Vikram's Cobra | Irfan Pathan character look poster | Ajay Gnanamuthu
27/10/2020 07:00 PM
SHOCKING: Popular actress stabbed thrice for rejecting marriage proposal!
27/10/2020 06:13 PM
Breaking announcement on Vishal's Thupparivaalan 2 - all set for action!
27/10/2020 05:16 PM
Have you seen these pictures of Bigg Boss fame Samyuktha? Check Out!
27/10/2020 04:16 PM