வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் விஜயலக்ஷ்மி.தொடர்ந்து அஞ்சாதே,சரோஜா,ஆடாம ஜெயிச்சோமடா,சென்னை 28 2 உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார் விஜயலக்ஷ்மி.

விஜயலக்ஷ்மி தனது பள்ளிப்பருவ நண்பரான பெரோஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.பெரோஸ் கிருஷ்ணா நடித்த பண்டிகை படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தவிர சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாயகி தொடரில் நடித்து வந்தார் விஜயலக்ஷ்மி.இந்த தொடரில் இருந்து சில காரணங்களால் விஜயலக்ஷ்மி வெளியேறினார்.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 2 தொடரில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபலமானவராக மாறினார் விஜயலக்ஷ்மி.இதனை தொடர்ந்து சில வருடங்களாக படங்கள் சீரியல் என்று எதிலும் நடிக்காமல் இருந்து வந்தார் விஜயலக்ஷ்மி.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வ்ப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்கள் உடன் பகிர்ந்து வந்தார்.தற்போது தனது புதிய நடன வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் விஜயலக்ஷ்மி.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg)