தன்னுடைய 6 வயது மகனை கழுத்தை அறுத்துக் கொன்ற தாயார், “அல்லாவின் மகிழ்ச்சிக்காகக் கொன்றதாக வாக்குமூலம்” அளித்துள்ளது கடும் அதிர்ச்சியை 
ஏற்படுத்தி உள்ளது.

கேராள மாநிலத்தில் தான், இப்படி கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேராள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள புலக்காடு பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஷாஹிதா என்ற பெண், மதராசா பள்ளியின் ஆசிரியையாக 
பணியாற்றி வருகிறார். 

இவரது கணவரான சுலைமான், அந்த பகுதியில் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு, 6 வயது மகன் உட்பட மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளனர். அதில், அந்த 6 வயது மகன், அவர்களுக்குக் கடைசி குழந்தை ஆவார். அந்த 6 வயது சிறுவன், அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.

இப்படியான சூழ்நிலையில்,  30 வயதான ஷாஹிதாவுக்கு தனது மத கடவுளான அல்லாவின் மீது அதீத பக்தி கொண்டிருந்து உள்ளார். ஒரு கட்டத்தில், அவருடைய கடவுள் பக்தி அதிகமாக முற்றி உள்ளது.

இதனால், தனது மகனின் உயிரையும் பலி கொடுக்கும் அளவுக்கு அவர் முன் வந்திருக்கிறார்.

அதன் படி, ஆசிரியையான அந்த தாயார், அல்லாவை மகிழ்விக்கும் பொருட்டு, தன்னுடைய 6 வயது மகனை கழுத்தை அறுத்துக் கொன்று இருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, “கடவுளுக்காகத் தியாகம் செய்யும் நோக்கத்தில் எனது 6 வயது மகனை கொன்று விட்டேன்” என்று, அந்த பகுதியில் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு அவரே போன் செய்து தகவல் தெரிவித்து உள்ளார்.

அதாவது, அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள்ளான இடைப்பட்ட நேரத்தில், காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த ஷாஹிதா, இந்த தகவலை கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அப்போது, போலீசாரின் வருகைக்காகத் தனது வீட்டின் வாசலில் அந்த தாயார் காத்திருந்து உள்ளார்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த போலீசார் சற்று குழப்பம் அடைந்தனர். பின்னர், வீட்டிற்கு வருகை தந்த போலீசாரை அந்த பெண்ணை உள்ளே அழைத்துக்கொண்டு, தனது மகனை கொலை செய்ததை பற்றி கூறிக்கொண்டே, வீட்டின் உள்ளே இருந்த அந்த இடத்தையும் காட்டி உள்ளார். 

அதன்படி, அந்த வீட்டின் குளியலறையில் அந்த பெண்ணின் 6 வயது மகன், கழுத்து அறுபட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக 
அங்கு கிடந்து உள்ளான்.

அதே நேரத்தில், ஷாஷிதாவின் கணவரான சுலைமானும், அவர்களின் முதல் இரு குழந்தைகளும் அந்த வீட்டின் மற்றொரு அறையில் நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்து உள்ளனர். அவர்களுக்கு, இந்த கொலை சம்பவம் குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில், அந்த அதிகாலை நேரத்தில், நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்து உள்ளனர்.

இதனையடுத்து, கொலை செய்யப்பட்ட சிறுவனின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கா அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மகனை கொலை செய்த தாயாரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில்,  “அல்லாவுக்காக கொன்றதாக” அவர் கூறியிருக்கிறார். 

மேலும், இந்த கொலை வழக்கில் வேறு கோணங்களிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதே நேரத்தில், குற்றவாளியான தாயார் ஷாஹிதா, அங்குள்ள மதராசா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்றும், இவர் தற்போது 3 மாதமாக கருவுற்று இருப்பதும், போலீசாரின் விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியும், பீதியும் ஏற்பட்டுள்ளது.

இது போலவே, கடந்த மாதம், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் இரண்டு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே, அமானுஷ்யங்களை நம்பி, பூஜை செய்து அடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.