தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 12 பெண் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்குச் செல்கின்றனர்.

பெண்கள் எப்போதுமே ஸபெசல் தான். அதுவும் அதிகாரம் மிக்க பதிவிகளுக்கு வரும் பெண்கள். இந்த சமூகத்தால் இன்னம் கூடுதலாக உற்று நோக்கப்படுவார்கள்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்தள்ளள சட்டப் பேரவை தேர்தலில், எல்லா கட்சிகளும் தங்களது கட்சியில் பெண் வேட்பாளர்களுக்கு சீட் கொடுத்த, களத்தில் இறக்கியது.

இதில், மற்ற கட்சிகளில் பெண் வேட்பாளர்களுக்கு மிக குறைவான இடங்களை ஒதுக்கி இருந்தன. ஆனால், நாம் தமிழர் கட்சியானது, இந்த தேர்தலில் பெண்களுக்கு சரிபாதியாக 117 தொகுதிகளை ஒதுக்கியது. நாம் தமிழர் கட்சியின் இந்த செயல்பாடு, தமிழகம் முழுவதும் அனைவரது கவனத்தையும் பெற்றதோடு, அனைவரும் பேசும் படியாகவும் அமைந்திருந்தது. எனினும் நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் ஒருவர் கூட பெற்றிப் பெறாத போதும். மற்ற கட்சிகளை சேர்ந்த 12 பெண்கள் பெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாக சட்டமன்றத்திற்குச் செல்கின்றனர்.

அதன் படி, தற்போது ஆளும் கட்சியாக வந்துள்ள திமுக வில் மொத்தம் 6 பெண் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்று உள்ளனர். 

173 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக சார்பில், 12 பெண் வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில், தூத்துக்குடி தொகுதியில் கீதா ஜீவன், குடியாத்தம் தொகுதி அமுலு, தாராபுரம் தொகுதியில் கயல்விழி, கிருஷ்ணராயபுரம் தனி தொகுதியில் சிவகாமசுந்தரி, மானாமதுரை தொகுதியில் தமிழரசி, செங்கல்பட்டு தொகுதியில் வரலட்சுமி மதுசூதனன் ஆகிய 6 பெண்கள், எம்.எல்.ஏ.க்களாக தமிழக சட்டமன்றத்தை இந்த முறை அலங்கறிக்கன்றனர்.

அதே போல், இந்த முறை 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் 171 இடங்களில் போட்டியிட்ட அதிமுக, 14 பெண்கள் வேட்பாளர்களைக் களம் இறக்கியது. 

ஆனால், இந்த முறை அதிமுக சார்பில் பெண்கள் மட்டுமே சட்டமன்றத்திற்கு செல்கிறார்கள். அதன் படி, அதிமுக சார்பில் நிலக்கோட்டை தனி தொகுதியில் தேன்மொழி, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமாரவேல், ஏற்காடு தொகுதியில் சித்ரா ஆகிய 3 பெண்களும் எம்.எல்.ஏக்களாக சட்டமன்றத்தை அலங்கரிக்கின்றனர்.

அதே போல், பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற சரஸ்வதி ஆகிய 2 பெண்களும், எம்.எல்.ஏக்களாக மாறி தமிழக சட்டமன்றம் செல்கின்றனர்.

மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட விஜயதாரணி வெற்றி பெற்று எம்.எல்.ஏ. வாக சட்டமன்றத்திற்கு செல்கிறார்.

எனினும் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட 21 பெண் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தை 
அலங்கரித்தனர். ஆனால், இந்தத் தேர்தலில் பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 லிருந்து 12 ஆகக் குறைந்து உள்ளது. 

அத்துடன், கடந்த 2016 ஆம் ஆண்டு 9 சதவீதமாக இருந்த பெண் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையானது, தற்போது மேலும் குறைந்து உள்ளது வருத்தம் அளிக்கும் வகையல் உள்ளது.

234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றமானது, இதற்கு முன்பு 10 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டு இருந்தது. 

இதுவே, கடந்த 1991 ஆம் ஆண்டில் 32 பெண் எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் நுழைந்திருந்தனர். இது 13 சதவீதம் ஆகும். அப்போது, இந்த எண்ணிக்கையானது, அதிக பெண் எம்.எல்.ஏக்களைக் கொண்டதாக இருந்தது. அதனைத் தொடர்ச்சியாக, கடந்த 2001 ஆம் ஆண்டு 24 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அது 10 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு 10 சதவீதத்திற்கும் குறைவாகக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.