தமிழ் சினிமாவில் “மேயாத மான்” திரைப்படம் மூலமாக கதாநாயகியாக  அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திலும் நடித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி  பெற்றது குறித்து ப்ரியா பவானி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் - 

“நீண்ட காலத்துக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழி நடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பலமடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம் வாழ்த்துக்கள்”  

என பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் பிரியா பவானி சங்கர்-ஐ பின் தொடரும் ஒரு நபர்  இந்த பதிவு மிகவும் முட்டாள்தனமானது. “சகோதரி ஆறாம் வகுப்பு குடிமையிலை தாண்டியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்” என கமெண்ட்டில்  பதிலளித்தார்.சரியான புரிதல் இல்லாமல் கேலி செய்த அந்த நபருக்கு ,

"Take a seat என்றால் Seat-அ தூக்கிக்கிட்டு நில்லுன்னு அர்த்தம் இல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்னா மக்கள் உட்கார்ந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது.6th std civics book விட நிறைய படிச்சிருக்கேன் சார் மற்றபடி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை"  

என பதிலளித்து சரியான பதிலடியை கொடுத்துள்ளார் பிரியா பவானி சங்கர் . 

இதற்கிடையில் வேறு ஒரு நபர்  2018 ஆம் ஆண்டு திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டபோது அவரை விடுதலை செய்யக்கோரி பதிவிட்ட  ஒரு பதிவை மேற்கோள் காட்டி  பிரியா பவானி சங்கர்-ஐ திராவிடன் என்று விமர்சித்த நபரையும் நையாண்டியாக பதிலளித்து பிரியா பவானி சங்கர் தக்க பதிலடி கொடுத்தார்

actress priya bhavani shankar hits back baseless trolls and hates

அதில், 

“பெரிய சிஐடி ஏதோ தேடி கண்டு பிடிச்ச மாதிரி, இதில் என்ன பெருமை என் timeline-ல் இன்னும் தானே இருக்கு நாலு வருஷம்  journalista இருந்து இருக்கேன் என் வேலையே அது தான் இன்னும் நிறைய எழுதி இருக்கேன் நன்கு தேடவும்” 

என பதிவிட்டு  தான் நான்கு வருடம் பத்திரிக்கையாளராக இருந்தவள் தான் எனவும் தெரிவித்துள்ளார்.ஆரம்பத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர்-இன் இந்தப் பதிவுகள் டுவிட்டரில் வைரலாகி  அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.