சமீபத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகரும் ஒளிப்பதிவாளருமான “நட்டி”வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். கர்ணன் திரைப்படத்தில்   கண்ணபிரான் என்ற கதாபாத்திரத்தில் மிடுக்கான காவல்துறை அதிகாரியாக நடித்த நட்டிக்கு பல தரப்பிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. 

bharathi raja appreciates actor natti for his work in karnan movieஇந்நிலையில் இயக்குனர்  இமயம் பாரதிராஜா அவர்கள்  நடிகர் நடிகை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். படத்தில் நட்டியின் உடல் மொழியையும் நடிப்பையும் வெகுவாக  பாராட்டிய இயக்குனர்  இமயம் பாரதிராஜாவின்  இந்த தொலைபேசி அழைப்பால் மிகவும் நெகிழ்ந்து போன நடிகர் நட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார். 

"இன்று இரவு எனக்கு உறக்கம் வருமா என்று தெரியவில்லை"

என்று பாரதிராஜா அவர்கள் பாராட்டியதை குறித்து அதில் குறிப்பிட்டுள்ளார் மேலும் இத்தனை பாராட்டுகளுக்கும் காரணமாக இருந்த தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு, இயக்குனர் மாரிசெல்வராஜ் , நடிகர் தனுஷ்க்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார் .

முன்னதாக கர்ணன் திரைப்படம் வெளியாகி சில நாட்களில் கர்ணன் திரைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் கண்ணபிரான் கதாபாத்திரத்தில் நடித்த நட்டியையும் கண்ணபிரான் கதாபாத்திரத்தையும் மிகவும் வெறுத்து ட்விட்டரில் திட்டி தள்ளினார்கள்  .அதற்கும் நடிகர் நட்டி அது வெறும் கதாபாத்திரம்தான்  என சமூக வலைதளங்களில் பதிலளித்தார்.