கொரோனா வைரஸ்-இன் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் மக்களை திக்குமுக்காட வைக்கிறது. இந்நிலையில் பிரபல சினிமா நடிகையின் சகோதரர்  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 

actress pia bajpai brother passes away due to corona

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஏஎல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் பியா பஜ்பை தொடர்ந்து வெங்கட்பிரபுவின் கோவா ,கேவி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த கோ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நன்கு பிரபலமானார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்து வந்தார். 

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் பருகாபாத்  மாவட்டத்தில் வசித்து வந்த பியா பஜ்பை-இன்  சகோதரர் சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புக்கு  உள்ளாகி இருக்கிறார். வென்டிலேட்டர்  பொருத்தப்பட்டபடி  தீவிர சிகிச்சையில் இருந்த அவரது சகோதரரின் உடல் நிலை  இன்று அதிகாலை அளவில் மிகவும் கவலைக்கிடமானதால்  அவருக்கு உதவி செய்யும்படி  அவரது சகோதரனின் நிலையைப் பற்றிக் குறிப்பிட்டு ஒரு தொலைபேசி எண்ணையும் இணைத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.  ஆனால் பதிவிட்ட இரண்டு மணி நேரத்திற்குள் பியா பாஜ்பாய் அண்ணன் உயிரிழந்தார்  என்ற செய்தியையும் பியா பாஜ்பாய் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

உதவி கேட்டு டுவிட்டரில் பதிவு செய்த சில மணி நேரங்களுக்குள் வியாபாரச் துறையின் சகோதரர் உயிரிழந்திருப்பது  இந்த செய்தியை பார்த்த அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவில் இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக இருக்கும் நிலையில் நாம் அனைவரும் மிகுந்த பாதுகாப்போடு முகக் கவசங்கள் அணிந்து கொண்டு சாதனை பயன்படுத்திக்கொண்டு சமூக இடைவெளியோடு அரசாங்கம் மற்றும் மருத்துவர்கள் சொல்லும் அனைத்து பாதுகாப்பு அறிவுறுத்தலின்படி நடந்து கொள்வோம்.