தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்க இருப்பதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த மாதம் 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தற்போது வரை திமுக பல்வேறு இடங்களில் வெற்றிப் பெற்று வருகின்றனர்.

அத்துடன், 158 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன. அதே போல், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 75 இடங்களில் மட்டும் முன்னிலையில் இருக்கின்றன.

அதன்படி, சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் அமொகமாக வெற்றி பெற்று உள்ளார்.

சென்னை ஆலந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பரசன் வெற்றி பெற்று உள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதியில் 14 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் நேரு முன்னிலையில் இருக்கிறார்.

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எ.வ.வேலு, 80161 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தணிகைவேலை விட 59 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் தேவராஜி வெற்றிப் பெற்று உள்ளார். ஜோலார்பேட்டையில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான அமைச்சர் கே.சி.வீரமணி இதனால் தோல்வி அடைந்து உள்ளார்.

வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் வெற்றி பெற்று உள்ளார்.

திருக்கோவிலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி பெற்று உள்ளார்.

திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷணன் 85,231 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே. ஆர்.எம் .ராதாகிருஷ்ணனை வீழ்த்தி அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றியை தன்வசமாக்கி உள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி முகம் காணும் திமுகவுக்கு என்னுடைய வாழ்த்துகள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். 

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து கூறியுள்ளார். 

திமுக தலைவர் மு. க ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். 

திமுக தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலாளார் வைகோ வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, திமுக ஆட்சி அமைக்க உள்ளதை தொடர்ந்து பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதன் படி, பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள  திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஆயுதப்படை கூடுதல் டிஜிபி சங்கஜூவால் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதே போல், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி கிட்டதட்ட உறுதியாகி உள்ளது.