த்ரிஷா - தென்னிந்திய திரையுலகின் தேவதை. துணை நடிகையாக திரையில் கால்பதித்து இன்று ரசிகர்களின் மனதில் கோட்டை கட்டியிருக்கும் நடிகை. ஹை கிளாஸ் பெண்ணாக மட்டுமல்லாமல், நம் பார்த்து பழகும் பக்கத்து வீட்டு பெண்ணாகவும் திரையில் ஜொலிப்பது த்ரிஷாவின் மிகப்பெரிய பிளஸ். 

தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி என அனைத்து ஏரியாக்களிலும் சொல்லி அடிக்கும் கில்லியாய் விளங்குபவர். கில்லி என்றவுடன் நினைவுக்கு வருகிறது தனலக்ஷ்மி பாத்திரம். கிராமத்து பெண்ணாக ஸ்கோர் செய்திருப்பார் த்ரிஷா. ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் த்ரிஷாவிற்கென இடம் கிடைத்தது இந்த படத்தில் தான்.

பல ஹீரோயின்கள் தலை காட்னாலும் த்ரிஷாவின் இடத்தை பிடிக்க யாராலும் இயலவில்லை. மண்ணில் கோலம் போடும் பழைய ஃபார்முலாக்களுக்கு நடுவே, விண்ணில் கோலம் போட்டது, இவர் ஏற்று நடித்த ஜெஸ்ஸி எனும் பாத்திரம். விண்ணத்தாண்டி வருவாயா படத்தில் உலா வந்தார் நம் ஹோசானா.

நடிகைகளுக்கு முக்கியதுவம் வாயந்த கதைகள் வரத்துவங்கியது. இருந்தாலும் ஆடியன்ஸ் மத்தியில் த்ரிஷா மாதிரி வருமா ? என்ற ஏக்கம் நீடித்தது. அத்தருணத்தில் எந்த ஒரு பில்டப்பும் இல்லாமல் ஜானுவாக தோன்றினார் நம் த்ரிஷா. 

இன்று வரை ஏதாவது ஒரு ஜவுளி கடைகளில், த்ரிஷா போட்ருக்க ட்ரெஸ் மாதிரி காட்டுங்க...என்று கேட்க்கும் வாடிக்கையாளார்கள் இருக்கதான் செய்யுறாங்க !!! 

கனவு கன்னி கான்டெஸ்ட்டாக இருக்கட்டும், கண்கவரும் பாத்திரமாக இருக்கட்டும்... த்ரிஷா தான் முதல் சாய்ஸ். இன்று த்ரிஷாவின் பிறந்தநாளை ரசிகர்களோடு கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா