சென்னையில் உள்ள 16 தொகுதியிலும், தமிழகத்தின் பிற தொகுதிகளிலும் திமுக தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால், தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலில் தற்போது வரை திமுக 153 தொகுதிகளில் தொடர்ச்சியாக முன்னிலையில் இருக்கின்றன. 

அதே போல், தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 83 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. 

இவற்றுடன், மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் இருக்கிறது. 

தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க கிட்டதட்ட 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது திமுக 117 தொகுதிளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

இதன் காரணமாக, தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிகமாகவே தற்போது உருவாகி உள்ளது. 

கடந்த 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளதால், அந்த கட்சியின் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

அதன் படி, திமுக கூட்டணியானது 153 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கின்றன.

இவற்றில் 

திமுக 117 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. விசிக 4 இடங்களிலும், மதிமுக 4
இடங்களிலும், இந்திய கம்யூனிஷ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலா 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 

அதே போல், அதிமுக கூட்டணி 83 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. 

அதன் படி, 

அதிமுக 73 இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக 5 இடங்களில் முன்னிலையில் உள்ளன. பாஜக 3 இடங்களிலும் பிற கட்சிகள் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

இவர்களுடன், மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது. 

இதனிடையே, வாக்கு எண்ணிக்கையில் திமுக தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால், “மு.க.ஸ்டாலின் எனும் நான்” என்ற வாசகம், டிவிட்டரில் தற்போது ட்ரெண்டிங் ஆகிக்கொண்டு இருக்கிறது.

அதே நேரத்தில், திரைத்துறையினர் பலரும் திமுக வெற்றி பெற்றிருப்பதற்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து டிவீட் செய்து வருகின்றனர். 

குறிப்பாக, நடிகர் சித்தார்த், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.