உலகத்தை அழிக்க வரும் தீய சக்திகளிடமிருந்து மனிதர்களையும் உலகையும் காப்பாற்ற பல சிறப்பு சக்திகளோடு களமிறங்கி தீயசக்திகள் ,ஏலியன்கள் ,அரக்கர்கள் என அனைவரையும் துவம்சம் செய்பவர்கள்தான்  சூப்பர் ஹீரோஸ். ஐந்து வயது குழந்தையிலிருந்து 60 வயது முதியவர் வரை அனைவரையும் கட்டிப் போட்டு அமர வைத்து மாயாஜால வித்தைகள் காட்டி ஒரு கற்பனை உலகத்திற்குள் அழைத்துச் சென்று கொண்டாட வைப்பார்கள் மார்வெல் ஸ்டுடியோஸ் சூப்பர் ஹீரோக்கள். 

marvel studios officially released the list of upcoming super heroes moviesமார்வெல் ஸ்டுடியோஸ்-ன் ஒவ்வொரு சூப்பர் ஹீரோ விற்கும் தனித்தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கின்றன. அவெஞ்சர்ஸ் இந்தப் பெயரைக் கேட்டாலே மார்வல் ரசிகர்கள்  முகத்தில் இனம் புரியாத ஒரு உணர்வு தோன்றும். 2008 ஆம் ஆண்டு வெளிவந்த அயன் மேன் பாகம் 1 திரைப்படத்திலிருந்து  அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் வரை பதினோரு ஆண்டுகள் 23 திரைப்படங்களை பார்த்து ரசித்துக் கொண்டாடி இருக்கிறார்கள். அயன் மேன் ,கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர்,ஸ்பைடர் மேன், பிளாக் பேன்தர், பிளாக் விடோ , டாக்டர் ஸ்ட்ரேஞ்  என ரசிகர்களின் மனம் கவர்ந்த பல சூப்பர் ஹீரோக்கள், இவர்கள் அனைவருக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒரு மாபெரும் சூப்பர் வில்லன் தானோஸ். மார்வெல் ரசிகர்கள் எந்த அளவுக்கு மார்வெல் திரைப்படங்களை  ரசிக்கிறார்கள் பின்தொடர்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக அமைந்தது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் .

marvel studios officially released the list of upcoming super heroes moviesஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தில் அயன் மேன்-இன் உயிர் பிரியும் தருவாயில் ரசிகர்கள் கண்ணீர் விட்டது ,கேப்டன் அமெரிக்கா தோரின் சுத்தியலை கையால் தூக்கும்போது கத்திய கூச்சலும் மார்வெல் பற்றி தெரியாதவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாத உணர்வுகள்.

  marvel studios officially released the list of upcoming super heroes movies

இந்நிலையில் அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ கேரக்டர்களில் ஒன்றான ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தின் ஒரு திரைப்படம் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்திற்கு பிறகு வெளியானது .அதைத் தொடர்ந்து  தி ஃபால்கன் அண்ட் தி வின்டேஜ் சோல்ஜர் சூப்பர் ஹீரோக்களின் கதை வெப் சீரிஸாக  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் வெளியானது. இப்போது நாவல் ரசிகர்களுக்கு மேலும் ஒரு கொண்டாட்டமாக வருகிற  ஜூலை 9ஆம் நாள் வெளியாகிறது பிளாக் விடோ திரைப்படம். பிளாக் விடோவாக  ஸ்கேர்லட் ஜான்சன்  நடிக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மர்வெல் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் பிளாக் விடோ திரைப்படத்தை தொடர்ந்து வெளியாக  உள்ள மார்வெல் திரைப்படங்களின்  பட்டியலை வெளியிட்டுள்ளது.