சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டமான, வண்ணாரப்பேட்டை-திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவை மற்றும் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். 


இந்நிலையில் ராகுல்காந்தியும் தனது தமிழகத்தில் 2ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் 14,15,16-ம் தேதிகளில் 2ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ராகுல் காந்தி பரப்புரை செய்ய உள்ளார். 


ராகுல்காந்தி பிரச்சாரத்தை இந்த மாதம் 14ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடியும் 14ம் தேதி தமிழகம் வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டின் பெரிய தலைவரகள் இருவரும் ஒரே நேரத்தில் தமிழகம் வரவுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்த தொடங்கியுள்ளனர்.