ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் சக்ரா. ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமில்ல, வைர் லெஸ்ஸும் ஆபத்துதான் என்று விஷால் ட்ரைலரில் பேசிய வசனம் ரசிகர்களை கவர்ந்தது. 

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்கி முடித்துவிட்டது படக்குழு. தற்போது மாஸ்டர் படத்துக்குக் கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பை முன்வைத்து திரையரங்கிலேயே சக்ரா படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. 

இந்நிலையில் பிப்ரவரி 19-ம் தேதி சக்ரா வெளியாகும் என்ற அறிவிப்பு இணையத்தை அசத்தி வருகிறது. யுவன் ஷங்கர் இசையில் படத்தின் முதல் சிங்கிளான ஹர்லா ஃபர்லா பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. யுவன் இசையில் விஷால் நடிக்கும் சக்ரா பத்தாவது படமாகும். 

இந்த காம்போவிற்கென தனி ரசிகர்கள் உண்டு. அதனைத் தொடர்ந்து மேக்கிங் வீடியோ வெளியானது. படத்தின் Scream of Darkness என்ற தீம் இசை மூன்று நாட்கள் முன்பு வெளியானது. இதில் வரும் காட்சிகள் கண்கவரும் வகையில் உள்ளது. 

இந்த படத்தை தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் எனிமி படத்தில் நடித்து வருகிறார் விஷால். ஒன்பது வருடங்களுக்கு பிறகு விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கின்றனர். இதைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். 

vishal chakra movie to release in theatres on february 19