சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி தமிழக அணி வெற்றிபெற்றுள்ளது. இந்த தொடர் வெற்றிக்கு பின் தமிழக அணி வீரர்கள் வெளியிட்ட வீடியோ பெரிய வைரலாகி உள்ளது. சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. பெங்களூர், கொல்கத்தா, சென்னை, மும்பை, வாதோரா, இந்தூர், அஹமதாபாத் ஆகியோர் நகரங்களில் இந்த போட்டிகள் நடந்தது.

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணி சாம்பியன் ஆகியுள்ளது. மிகவும் பரபரப்பாக சென்ற இறுதிப்போட்டில் பரோடாவை வீழ்த்தி தமிழக அணி வென்றுள்ளது. தமிழக அணிக்கு இது இரண்டாவது சையது முஷ்டாக் கோப்பை வெற்றியாகும். 2007ல் முதல்முறை தமிழக அணி இந்த கோப்பையை வென்றது. அதன்பின் மீண்டும் நேற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இரண்டு முறையும் தினேஷ் கார்த்திக்தான் கேப்டனாக இருந்தார்.

இந்த தொடர் வெற்றிக்கு பின் தமிழக அணி வீரர்கள் வெளியிட்ட வீடியோ பெரிய வைரலாகி உள்ளது. அதன்படி தமிழக அணி வீரர்கள் நேற்று வெற்றிக்கு பின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஒன்றாக நடனம் ஆடியுள்ளார். தளபதி விஜய் ஆடும் அதே ஸ்டெப்பை போட்டு ஒன்றாக நடனம் ஆடியுள்ளனர் .

தினேஷ் கார்த்திக் முன்னாள் நின்று ஆட, அவருக்கு பின்னால் நின்று தமிழக அணி வீரர்கள் ஆடியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. எல்லோரும் ஒரே மாதிரி தளபதியின் ஸ்டெப் போட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர். அதிலும் போட்டியில் வெற்றிக்கு பின் தினேஷ் கார்த்திக் கப்பு முக்கியம் பிகிலே என்று விஜய் பாணியில் ட்விட் செய்திருந்தார். 

இன்னொரு பக்கம் தமிழக வீரர் சாய் கிஷோரும் கப்பு முக்கியம் பிகிலே என்று ட்விட் செய்து இருந்தார். தமிழக அணியில் காயம் காரணமாக வாய்ப்பை இழந்த வருண் சக்கரவர்த்தியும் தீவிர விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாய் கடந்த ஜனவரி 13-ம் தேதி வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.