நவம்பர் 21-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார். அப்போது தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்திருந்தார்.


இப்பொழுது மீண்டும் அமித் ஷா 14-ம் தேதி, துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வர இருந்தார். அதிமுக தலைமையிலான கூட்டணி தான் அமையும் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிய நிலையில் , இந்த முறை மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி இடையே தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடக்கலாம் என எதிர்ப் பார்க்கப்பட்டு இருந்தது. 


இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14-ம் தேதி தமிழகம் வருவதாக இருந்த நிலையில் தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது. அமித்ஷாவுக்கு பதிலாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, துக்ளக் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.